(Reading time: 8 - 16 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

கலங்கலை தெரியுமா”

   

”எல்லாருக்கும் என் அப்பா போல வாய்க்குமா என்ன, என் பொண்ணு பாவம்” என்றார்  வருத்தமாக அதைக் கேட்ட சிவசங்கரன்

   

”கல்யாணம் ஆனதும் சம்யுக்தா தனிக்குடித்தனம்தான் போவா, அதையெல்லாம் பேசி வைச்சிட்டேன், நம்ம பொண்ணுக்காக மதுரையில ஒரு வீட்டையே விலைக்கு வாங்கிட்டேன், வீடுன்னா இப்ப நாம இருக்கற மாதிரி பங்களா டைப்தான், அங்க சம்யுக்தா இருப்பா  வேணும்னா நீ அவள்கூட போய் இருந்துக்க”

   

”அப்ப உங்களை யார் பார்த்துக்குவாங்களாம்”

   

“நான் அடிக்கடி வந்து உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிறேன்”

   

”ஒண்ணும் வேணாம் உங்களுக்கே பிபி இருக்கு, சுகர் இருக்கு, நேரத்துக்கு மருந்து எடுத்துக்க கூட தெரியாது, யாராவது உங்களோட இருக்கனும், இதுல நான் மதுரைக்கு போயிட்டா அவ்ளோதான் போன 2வது நாளே உங்க உடம்பு சரியில்லாம போகும், நான் எங்கயும் போய் தங்கலை இங்கயே இருக்கேன்”

   

”சரி சம்யுக்தாவை வேணா அடிக்கடி வர சொல்லிடலாம், மதுரையிலதான் ஏர்போர்ட் இருக்கே வான்னா ப்ளைட்ல ஏறி வந்துடப் போறா போதுமா”

   

”என்னவோங்க மாப்பிள்ளை நல்லவரு, நம்ம பொண்ணை அவர் நல்லா பார்த்துக்குவாரு அது போதும் எனக்கு, சம்யுக்தா இல்லாத குறையை எப்படி ஆத்திக்கறதுன்னுதான் தெரியலை, இருக்கட்டும்ங்க நாள் போனா தானா எல்லாம் மாறும், நாளைக்கு பொண்ணுக்கு பிறந்தநாள் வருதே அவளுக்கு என்ன பரிசு தரப்போறீங்க”

   

”அவளுக்காக மதுரையில வாங்கியிருக்கற பங்களாதான் பரிசே, இந்த விசயம் அவளுக்குத் தெரிய வேணாம், நாளைக்கு அவள் கையில நான் மதுரையில இருக்கற பங்களா சாவியை தரேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.