நின்றுவிட்டார், வெட்கத்தில் அவர் கன்னம் சிவந்தது
”போங்க நீங்க, கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை” என சிரித்தபடியே சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு அங்கிருந்து சென்றுவிட்டார்
மனைவியை சமாதானம் செய்துவிட்டாலும் சிவசங்கரனின் முகமும் வாட்டமாகதான் இருந்தது. சம்யுக்தாவை நினைத்து கவலைக்கொண்டார். நேற்றுதான் பிறந்த குழந்தையாக அவளை கையில் ஏந்தியது நினைவுக்கு வந்தது ஆனால், இப்போது அவளுக்கு திருமணம் ஆகப் போகிறது தன்னை விட்டு செல்லப்போகிறாள் என்றதுமே அவரின் கண்கள் கலங்கிவிட்டது.
மறுநாள் சம்யுக்தாவின் பிறந்தநாள், காலையில் அவள் எழும் போதே அவளின் கையில் மதுரையில் இருந்த வீட்டின் பத்திரமும் சாவியும் இருந்தது. முதலில் அவள் அதில்தான் கண்விழித்தாள். அது என்னவென பிரித்து பார்த்து மகிழ்ந்தாள். மகிழ்ச்சியுடன் தன் தந்தையைக் காண செல்ல அதற்குள் வீடே அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
”வாவ் சூப்பர்” என வீட்டையே சுற்றிப் பார்த்துவிட்டு தன் தந்தையிடம் வந்தாள். அவரோ ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தார், மகள் வரவும் மகிழ்ச்சியுடன்
”பிறந்த நாள் வாழ்த்துக்கள் சம்யுக்தா” என சொல்ல அவளும்
”தாங்ஸ்பா” என சொல்லிக் கொண்டே அவரின் பக்கம் அமர்ந்தாள். கையில் இருந்த சாவியையும் பத்திரத்தையும் அவரிடம் காட்டி
”இதுக்கும் தாங்ஸ்பா”
”இருக்கட்டும்மா”
”அம்மா எங்கப்பா தினமும் காபி கொடுக்க வருவாங்க, இப்ப அவங்களை ஆளையே காணலை”
”காலையிலயே கோயிலுக்கு போனவதான், இன்னும் வரலை எனக்கே காபி தரலைம்மா“