(Reading time: 8 - 16 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”நான் தனிக்குடித்தனம் போவேன் என்னை யார் குறை சொல்வா”

   

”உன் புருஷன் சொல்வான் பாரு, நின்னா, நடந்தா, உட்கார்ந்தான்னு குறை சொன்னா நீ என்ன செய்வியாம்”

   

”காலையிலயே காமெடி பண்ணாதம்மா இளங்கோவன் ரொம்ப நல்லவருன்னு அப்பா சொல்லிட்டாரு அப்பாவை போல அவர் என்னை பார்த்துக்குவார் நீ கவலைப்படாத”

   

”மறுபடியும் அடுப்படியை கழுவி சுத்தம் பண்ணனும், காலையிலயே எனக்கு ரெண்டு வேலை” என சொல்லியவர் அவளிடம்

   

”சுடு தண்ணி போட்டு வைக்கறேன் போய் குளி” என சொல்ல

   

”வேணாம்மா நானே போட்டுக்கறேன், நானே எல்லாத்தையும் கத்துக்கறேன்மா” என இயல்பாக சொல்ல அவருக்கு கோபமே வந்தது.

   

”ஏன்டி ஏன் நான் போடக்கூடாதா, இன்னும் 20 நாள் இருக்கு கல்யாணத்துக்கு, அதுவரைக்கும் நான் உனக்கு செய்றதை செய்துக்கிட்டுதான் இருப்பேன், நீ என்ன சொல்றது எழுந்து வா” என அதட்டிவிட்டு அவர் சென்றுவிட சம்யுக்தாவோ தன் தந்தையின் தோளில் சாய்ந்துக் கொள்ள அவரோ

   

”இன்னிக்கு எங்க பர்த்டே ட்ரீட் வைச்சிருக்க” என கேட்க அவளோ ஆர்வமாக தந்தையைப் பார்த்து

   

”நீங்களும் வர்றீங்களாப்பா“

   

”இல்லைம்மா இன்னிக்கு கடையில ஆடிட்டிங் இருக்கு, என்னால வரமுடியாது”

   

”சரிப்பா நோ ப்ராப்ளம், ட்ரீட்தானே எங்க வைக்கலாம்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.