”பரிசு கொடுத்து அசத்தறதுல உங்களை மிஞ்ச ஆளே இல்லைங்க”
”அப்படியா எதை வைச்சி சொல்ற”
”எனக்கு கல்யாணம் ஆன புதுசுல முதல் முதலா எனக்கு வந்த பிறந்த நாளுக்கு நீங்க என்ன கொடுத்தீங்கன்னு ஞாபகம் இருக்கா”
”நானா என்ன கொடுத்தேன் தெரியலையேம்மா மறந்துட்டேன்”
”கல்யாணத்துக்கப்புறம் வந்த என்னோட முதல் பிறந்த நாளன்னிக்குதான் நான் கர்ப்பம்னு டாக்டர் ரிசல்ட் சொன்னதா அந்த பேப்பரை கொண்டு வந்து என் கையில கொடுத்தீங்க, எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சி தெரியுமா”
”அன்னிக்குத்தான் உனக்கு புதுசா ஒரு வைர நெக்லஸ் பரிசா தந்தேனே அது உனக்கு ஞாபகம் வரலையா”
“நகைக்கென்ன குறைச்சல் அதுவும் நல்லாதான் இருந்திச்சி அதான் வருஷத்துக்கு 10 முறை புடவையா நகையா வாங்கித் தர்றீங்களே போதாதா, நான் சொன்னது சம்யுக்தாவைப் பத்திங்க அவள் பிறந்தப்ப எவ்ளோ அழகா இருந்தாள்னு தெரியுமா, இப்ப கூட அன்னிக்கு நடந்தது கண் முன்னாடியே தெரியுதுங்க, குட்டிக் குழந்தையா கண்ணுகூட திறக்க கஷ்டப்பட்டுக்கிட்டு சின்னதா சிரிப்பு சிரிச்சி கைகாலை அசைச்சி ஆட்டி ஆஹா” என சொல்ல சொல்ல அதற்கு சிவசங்கரனோ
”இங்க பாரும்மா எவ்ளோதான் நீ பேசினாலும் புலம்பினாலும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணித்தான் ஆகனும், அவளும் இன்னொரு வீட்டுக்கு போகதான் போறா இதுதான் விதி, அதை மாத்த என்னாலயும் முடியாதும்மா”
”ஆமாம்ங்க” என அவர் பெருமூச்சுவிட சிவசங்கரனோ அக்கம் பக்கம் சுற்றி முற்றி பார்த்துவிட்டு தன் மனைவியின் வாடிய முகத்தை மகிழ்ச்சியாக மாற்ற எண்ணி அவரின் பட்டுக்கன்னத்தில் அழுத்தமாக முத்தம் தர அதோடு சிவரஞ்சனி மீன் போல துள்ளி குதித்து எழுந்து ஓரமாக