(Reading time: 9 - 17 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 16 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

ன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளைக் கண்டான். உடல் அதிர்ந்துக் கொண்டு பயத்தில் நடுங்கியபடி தனது சட்டையை பிடித்துக் கொண்டு தன்மீதே சாய்ந்துக் கொண்டு இருந்தவளை அப்போதுதான் பார்த்தான். 

   

சம்யுக்தா பயந்திருந்தாள் பார்க்கவே பாவமாக இருந்தது, அவனின் கவனம் அவள் மீதே இருந்தது. அவனது அடியாட்களோ எதிரியின் 4 ஆட்களை பிடித்துக் கொண்டு அவன் முன் வந்து நிப்பாட்டிவிட்டு தாங்களும் நின்றபடி தில்லையைக் கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்.

   

அவனோ ஒரு கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு இன்னொரு கையை கொண்டு அவளை ஆறுதல் படுத்தலாமா வேணாமா என பலமாக யோசித்தான். சட்டென அவளை விட்டு விலக அவனுக்கு மனம் ஒப்பவில்லை, நன்றாக இருந்ததால் அமைதி காத்தான், அவளாகத்தானே வந்தாள் அவளே செல்லட்டும் என நினைத்தான். 

   

அவனது ஆட்களும் கூட அமைதியாக ஓரமாக நின்றுவிட்டனர். பிடித்து வைத்த ஆட்களையும் ஒரு வீட்டின் உள் அறையில் அடைத்துவிட்டு பூட்டிவிட்டனர், காயம் பட்டவனுக்கு ஒருவன் மருந்து வைத்து கட்டுகட்டி இன்னொரு அறையில் அடைத்துவிட்டான். 

   

தில்லை ஏதும் சொல்லாமலே அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள் ஆனால் தில்லையால் மட்டும் இயல்பு நிலைக்கு வரவே முடியவில்லை. எத்தனையோ நாட்களாக அவன் இழந்துப் போன எதுவோ ஒன்று தில்லைக்கு அப்போது கிடைத்துவிட்டதாக உணர்ந்தான். உள்ளுக்குள் மகிழ்ந்தான்

   

அவளின் முகத்தை பார்க்க முடியாவிட்டாலும் அவனது தலை அவளை பார்க்கும் ஆர்வத்தில் குனிந்திருந்தது. அவளின் பதட்ட நிலை இன்னும் அடங்கவில்லை. அவளை ஆதரவாக அணைக்க எண்ணினான் ஆனால், அவனது கை உதறல் எடுக்கவே சுற்றியிருந்தவர்களுக்கு சிரிப்பே வந்தது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்தனர். அக்கம் பக்கம் சுற்றி நடப்பது நன்றாக தில்லையின் காதில் விழுந்தும் அவன் கவனம் அவளை விட்டு விலகவில்லை. முழுக்கவனத்தையும் சம்யுக்தாவின் மீது வைத்திருந்தான் தில்லை.  அவளும் பயத்தில் அவன் என அறியாமல் அவனை பிடித்திருந்தாள் 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.