”சார் அங்கதான் தில்லையிருப்பான்னு யாருக்குத் தெரியும், அவனா சொன்னாதான் உண்டு, அந்த ஏரியாவுக்குள்ள நாமளோ இல்லை அவனோட எதிரிகளோ உள்ள நுழைஞ்சா அடுத்த நிமிஷம் அவனுக்கு தகவல் போயிடும், அதுக்கப்புறம் அவன் அங்க இருக்கமாட்டான், ஏகப்பட்ட ஷார்ட் ரூட்ஸ் இருக்கு சார், அதுல நுழைஞ்சி இதுல வந்துன்னு எஸ்கேப் ஆயிடுவான் சார், அவனை பிடிக்க முடியாம நாங்க பட்ட பாடு இருக்கே யப்பா”
”இப்பவும் நீங்க ஒண்ணும் அவனை பிடிக்கலையே, எவனோ ஒருத்தன் கையால அவன் செத்தான், செத்ததும் பாடியை கைபற்றிக் கொண்டு வந்தீங்க அவ்ளோதானே” என சொல்ல சம்யுக்தா இடைமறித்தாள்
”ஆபிசர் குறுக்க பேசறதுக்காக மன்னிக்கனும், அந்த டெட்பாடி தில்லையோடது இல்லை, அவர் உயிரோடதான் இருக்காரு காணாம போயிட்டாரு” என சொல்ல அவளை பாவமாக பார்த்தான் சிதம்பரம்
”நீங்க அப்பாவியா இல்லை தெரிஞ்சே இப்படியிருக்கீங்களான்னே எனக்குப் புரியலை, அவனோட உயிருக்கு ஆபத்து இருக்கு, கன் ஷுட் நடந்திருக்கு நீங்க பயந்திருக்கீங்க, அப்ப கூடவா நீங்க அவரைப் புரிஞ்சிக்கலை”
”புரிஞ்சிக்கிட்டேன் அந்தச் சமயம் அவரு ஒரு ராட்சஸன்னு புரிஞ்சிக்கிட்டேன், இரக்கமில்லாதவன், அயோக்கியன்னு நினைச்சேன் ஆனா, அதுக்கப்புறம் அப்படி நினைச்சது தப்புன்னு உணர்ந்தேன்”
”தப்புன்னு உணர்ந்தீங்களா அப்படின்னா அப்படி என்னதான் நடந்திச்சி” என கேட்க அவளும் சற்று பெருமூச்சுவிட்டு நடந்த நிகழ்வுக்குச் சென்றாள்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வெளியே வந்தனர், பிள்ளைகளும் தில்லையும் சம்யுக்தாவும் நெருக்கமாக கட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டு பார்த்துவிட்டு கலகலவென சிரித்தபடியே சென்றனர்.
அந்தச் சிரிப்பில் சம்யுக்தாவின் கவனம் சற்று மாறியது, அதுவரை பயத்தில் இருந்தவள்