தில்லையின் ஆட்களோ வேறு எவனாவது இருக்கறானா எதிரி என பார்க்க அங்கும் இங்கும் ஓடினார்கள், அலைந்தார்கள்? யாருமில்லை என அவர்கள் தெரிந்துக் கொண்டு வருவதற்கே 5 நிமிடங்கள் ஆனது அதுவரை இங்கு தில்லை சம்யுக்தாவிற்கு துணையாக நின்றுக் கொண்டு இருந்தான்.
அவனது ஆட்கள் வந்து தில்லையிடம் பேசவே கூச்சப்பட்டார்கள், சம்யுக்தா இருக்கும் போது எப்படி என யோசித்தார்கள், இதில் துப்பாக்கி சூடு நடந்தபடியால் வீட்டிற்குள் இருந்த பெண்களும் மற்றவர்களும் கூட வெளியே வந்து வேடிக்கைப் பார்த்தனர் அவர்களுக்கு துப்பாக்கி சூட்டை விட இங்கு தில்லையும் சம்யுக்தாவும் இணைந்து நிற்கும் காட்சிதான் சுவாரஸ்யமாக இருந்தது
அதனால் அதைக் கண்டு தங்களுக்குள் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள், சிலர் சிரித்தார்கள், சிலர் ரசித்தார்கள், சிலர் சம்யுக்தா யாரென குழம்பினார்கள், சிலர் சந்தேகித்தார்கள் ஆக மொத்தம் அவர்களுக்கு சம்யுக்தா யார்? அவளுக்கும் தில்லைக்கும் நடுவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் இருந்தார்கள்.
பட்டுச்சேலையும் நகைகளும் அணிந்து சம்யுக்தா இருக்க அவளது கையில் இருந்த தாலியானது அவனது உடலில் பட்டு தொல்லை செய்தது. அது அவனுக்கு கஷ்டமாக இருந்தது ஏதோ ஒரு நெருடல் அந்த தாலியால் தனக்கு உருவாவதைக் கண்டு தன்னால்தானே இவளுக்கு இந்த நிலைமை என்ற குற்ற உணர்வு அவனை வாட்டி எடுத்தது.
மெல்ல தன் கையால் அவள் தோளைப் பிடித்து உலுக்கினான். அதில் அவள் அவனை பிடித்திருந்த பிடியை விட்டாள்.
அந்நேரம் எதிரியின் ஆட்கள் 5 பேரும் நேரத்தோடு வேலையை முடித்துக் கொண்டு வராமல் போகவே அவர்களை அழைத்துவந்த கருணாகரனின் ஆட்கள் மூவர் என்னவென தெரிந்துக் கொள்ளவும் தனது ஆட்களை தில்லையிடம் மாட்டவிடாமல் அழைத்துச் செல்லவும் அங்கு வந்தவர்கள், அங்கு நடந்த தாக்குதலில் தங்களின் ஆட்கள் மாட்டிக் கொண்டதைக் கண்டு பயந்தார்கள், கூடவே தில்லைக்கு எதுவும் ஆகாததைப் பார்த்து கோபமடைந்தார்கள்.
”எத்தனை நாளா இவனை பிடிக்க காத்திருந்தோம், இன்னிக்கு வசமா சிக்கியும் தப்பிச்சிட்டானே,