இப்போது குழம்பினாள். அவளின் நடுக்கம் குறைவதைக் கண்ட தில்லையும் மெல்ல தன் கையால் அவளது கன்னத்தை தட்டிக் கொடுத்தான்.
அவளோ மெதுவாக கண்கள் திறந்துப் பார்த்தாள். அவள் பார்த்த போது அவனது கையில் துப்பாக்கி இருந்தது, அதுவும் அவளின் கண்ணுக்கு அருகாமையில் இருந்தது அதில் அவள் அச்சப்பட்டு கண்கள் மூடிக் கொண்டு இன்னும் அவனை இறுக்கி அணைத்துக் கொள்ள அவன் ஜென்மமே சாபல்யம் அடைந்தது போல அகமகிழ்ந்து மெல்லச் சிரித்தான்.
அவனது மகிழ்ச்சிக்கு கூட ஆயுள் குறைவு போல, எதிரியின் 5வது ஆள் மறைந்திருந்து துப்பாக்கியால் தில்லையின் முதுகிற்கு குறி வைத்து சுட்டான், அதே நொடி சம்யுக்தா தில்லை சிரித்த சிரிப்பில் சட்டென இயல்பு நிலைக்கு வந்தாள். தான் யாரை பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் புரிந்துக் கொண்டாள்.
தில்லையின் அருகாமை அவளை பதட்டமடைய வைத்தது. சென்ட்டோ, ட்யோட்ரன்டோ போட்டுக் கொள்ளாமல் இயல்பாக இருந்ததால் இயற்கையாக தில்லை மீது வீசிய மேனி வாசம் அவளை நிலை தடுமாற வைக்க சட்டென அவனை விட்டு விலக முயன்றவள் கோபத்தில் அவனை பிடித்து தள்ளிவிட்டு 2 அடி தள்ளி பின் நின்றாள்.
இந்த முறையும் துப்பாக்கியில் இருந்து வந்த தோட்டாவானது அவன் மீது படாமல் யார் மீதும் படாமல் நேராக சுவரில் சென்றுபடவே அந்தச் சத்தம் கேட்டதும் தில்லையின் கவனம் மாறியது உடனே உஷாரானான். அவனது கண்களை சுழலவிட்டான் கூடவே அவனது இன்னொரு கையையும் சுழலவிட்டான், சம்யுக்தா பார்க்கும் போதே எதிரியின் 5வது ஆளின் தோள்பட்டையில் படுமாறு துப்பாக்கியால் சுட்டான், சரியாக நின்ற இடத்திலேயே கையை உயர்த்தி நேரடியாக சுட்டதால் குறி தவறாமல் அவன் மீது பாய்ந்து அஆவென அலறியபடியே எதிரியின் ஆளும் தரையில் சரிந்தான்.
அவனை நோக்கி தில்லையின் ஆட்கள் ஓடினார்கள். சம்யுக்தாவோ பயத்தில் கண்கள் மூடிக் கொண்டு கைகளால் இரு காதையும் மூடிக்கொண்டு நடுக்கத்துடன் நின்றாள். அவளின் பயத்தைக் கண்ட தில்லையோ தானாக அவளிடம் சென்று ஒட்டிக்கொண்டு நிற்க அவளோ பயத்தில் மீண்டும் அவனையே ஒரு பக்கமாக பிடித்துக் கொண்டாள்.