(Reading time: 9 - 17 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சிதம்பரமோ கதை சொல்லிக் கொண்டிருந்த சம்யுக்தாவை தடுத்து நிப்பாட்டினான்

   

”என்னாச்சி ஆபிசர்” 

   

”துப்பாக்கி சூடு நடந்திருக்கு, அதுவும் அடுக்கு மாடி குடியிருப்பில நடந்திருக்கு, இது சம்பந்தமா கேஸ் ஏதாவது இருக்கும் இல்லை தகவல் இருக்கும், அதைப் பார்த்தா ஒரு வேளை நீங்க சொல்ற தில்லை எப்படியிருப்பான்னு கண்டுபிடிக்கலாம்” என சொல்ல அவளும் சரியென்றாள். 

   

உடனே சிதம்பரமும் கான்ஸ்டபிளை அழைத்து

   

”கொஞ்ச நாள் முன்னாடி ஏதாவது அடுக்குமாடி குடியிருப்பில கன்ஷுட்டிங் நடந்திருக்கா, அது சம்பந்தப்பட்ட தகவல்கள் இருக்குமே கொண்டு வாங்க பார்க்கலாம்”

   

”சார் தில்லை கெட்டிக்காரன் சார், அவன் இடத்தில என்ன நடந்தாலும் விசயம் ஏரியா விட்டே தாண்ட விடமாட்டான் சார்”

   

”அப்ப தகவல் எதுவும் இல்லைங்கறியா“

   

”அப்படி ஒண்ணு நடந்ததாவே யாருக்கும் தெரியாது சார், அவனே மறைச்சிட்டான்”

   

”அதெப்படியா அடுக்கு மாடி குடியிருப்பில எவ்ளோ மக்கள் இருப்பாங்க, அவங்க கூடவா இந்த விசயத்தை கண்டுக்காம இருப்பாங்க“

   

”சார் அவங்க எல்லாருமே அவனோட ஆளுங்க, அடியாளுங்களை அவங்க குடும்பதோட கூட வைச்சிக்கிட்டு இருக்கான்”

   

”ஏன்யா அவனுக்கென்ன புத்தி கெட்டுப்போச்சா, அடியாளுங்களோட குடும்பங்களையும் தன்கூடவே தங்க வைச்சிருப்பாங்களா அது ரிஸ்க்ன்னு தெரியாதா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.