Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 19 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அவளும் பார்த்தாள். சிறிது நேரத்தில் அங்கு 2 போலீஸ்காரர்கள் வரவும் சம்யுக்தாவின் கவனம் மாறியது. போலீஸ் வரவும் பயமும் கூடவே மகிழ்ச்சியும் வந்தது
”உன்னை கைது பண்ண போலீஸ் வந்துட்டாங்க” என சந்தோஷமாக சம்யுக்தா அவனிடம் சொல்ல அவனோ இளப்பமாகச் சிரித்தான். அதில் அவளோ குழம்பினாள். வந்த போலீஸ் இருவரும் அவனைப் பார்த்ததும் சல்யூட் வைத்தார்கள்.
தில்லையோ வந்திருந்த போலீஸ் ஒருவனைப் பார்த்து சிரித்தபடியே அவனது சல்யூட்டை ஏற்றுக் கொண்டது போல் கையால் சைகை செய்துவிட்டு
”வாடா சிவா வா வா” என அழைக்க அவனும் வீரமாக அவ்விடம் வந்தவன் தில்லையையும் சம்யுக்தாவையும் கண்டு குழம்பிப் போய் தலையில் இருந்த தொப்பியை கழட்டிவிட்டு அங்கு வந்து தில்லையின் பக்கத்தில் சோபாவில் அமர்ந்தான்.
”சொன்னா கேட்காம வந்திருக்கியே, என் மேல நம்பிக்கையில்லையா உனக்கு” என தில்லை கேட்க அதற்கு சிவாவோ
”உனக்கு ஏதாவது ஆச்சான்னு கவலைப்பட்டு ஓடி வந்தேன்”
”எனக்கா எதுவும் ஆகலை நீ கவலைப்படாத”
”எனக்கு உன்னை நினைச்சா கவலையாதான் இருக்கு, இருந்தாலும் என்ன நடக்குதுன்னு பார்க்க வந்தேன் ஆமா என்ன இது இங்கயே கன் ஷுட் செஞ்சிருக்க, அடுக்கு மாடி குடியிருப்பு, பொது மக்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சின்னா என்னாகிறதுன்னு யோசிச்சியா நீ“
”நான் என்ன செய்றது, கருணா ஆளுங்கதான் சுத்திக்கிட்டானுங்க”
“இருந்தாலும் இது ரிஸ்க்டா, நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு”
”தெரியுதுடா என்ன செய்றது, மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை, என் ஆளுங்கள்ல 2 பேருக்கு