(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”இது யாரு புதுசா இருக்கு”

   

”நேத்துதான் ட்யூட்டியில ஜாயின் பண்ணான், சரி உனக்கு காட்டலாம்னு வந்தேன்”

   

”ஆளு எப்படி எனக்கு விசுவாசமா இருப்பானா இல்லை சட்டம், நீதி, நியாயம்னு நிப்பான்னா” என சம்யுக்தாவை பார்த்தபடி கேட்க அதற்கு சிவாவோ

   

”சே சே இல்லை இல்லை அவனும் நம்மாளுதான், உன்னால இங்க மாட்டியிருக்கற எதிரியாட்களை கொண்டு போறதுக்கு அவனை கூட்டிட்டு வந்தேன்”

   

”பார்த்துடா புதுசுங்கற, இங்க நடந்ததை வேற பார்த்திருக்கான், மேலதிகாரிகிட்ட காட்டிக் கொடுத்திட போறான், ஏற்கனவே அந்தாளு என்னை என்கவுண்டர் பண்ணனும்னு தேடிக்கிட்டு இருக்கான், இதான் சாக்குன்னு இவன் நல்ல பேர் எடுக்கறேன்னு என்னை போட்டுத் தள்ளிடப் போறான் சிவா”

   

”ஆஆ அந்தளவுக்கு இல்லைப்பா இவன் நம்மாளுதான்” என சிவா உறுதியாகச் சொல்லவும் தில்லையும் வந்திருந்தவனை ஏற இறங்கப் பார்த்து

   

”பேர் என்ன” என அதிகாரமாக கேட்க அவனோ

   

”செந்தில் சார்”

   

”சரி சரி எனக்கு நீ விசுவாசமா இருந்தா உன் வாழ்க்கை ரொம்ப சிறப்பா இருக்கும் புரியுதா”

   

”புரியுது சார்”

   

”சத்தம் பத்தலையே” என சொல்லியவன் சித்தனை பார்த்து

   

”சித்தா புது ஆளுக்கு 10 கொடு” என சொல்ல சித்தனும் உடனே உள் அறைக்குச் சென்று அங்கிருந்த அட்டை பெட்டி ஒன்றிலிருந்து பத்து லட்சத்தோடு வந்து செந்திலிடம் தர அவனோ 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.