(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

தயங்கினான்

   

”அட வாங்கிக்க, இது வெறும் அட்வான்ஸ்தான் இதுக்கப்புறம் நான் செய்றதெல்லாம் பார்த்தும் கண்டுக்காம இருந்தா, இதை விட அதிகமா உனக்கு பணம் வரும்” என சொல்ல அவனும் சிரித்தபடியே பணத்தை வாங்கிக் கொண்டான்.

   

”என்னடா இது எனக்கும் 10 அவனுக்கும் 10, அவன் இப்பதானே வந்தான் எனக்கும் அவனுக்கும் ஒரே மாதிரியா கொடுத்தா எப்படி” என கேட்க

   

”புது ஆளுக்கு அதிகமா தந்தாதான் விசுவாசமும் அதிகமா கிடைக்கும், உனக்கு நான் எவ்ளோ தந்தாலும் உன் விசுவாசத்தை குறைவாதான் நீ காட்டுவ”

   

”நானா அடப்பாவி ஏன்டா காலையில கருணா ஆளுங்க உன் ஏரியாவை சுத்தி வளைச்ச விசயத்தை சொல்லலாம்னு போன் பண்ணேன், எடுத்தியா நீ, எப்படியாவது உனக்கு இந்த விசயம் சொல்லனும்னு என் ஒய்ப்கிட்ட சொல்லி தகவல் சொல்ல சொன்னா அவளையே நீ திட்டியிருக்க கொழுப்புடா உனக்கு”

   

”அட அப்படியா இங்க ஒரு பிரச்சனை அதுல என்ன செய்றதுன்னு தெரியாம என் கோபத்தை அங்க கொட்டிட்டேன், சே வருத்தமா இருக்கு சிவா, நான் எவ்ளோ சாரி சொல்லியும் கேட்கலை தெரியுமா, ப்ளீஸ்டா அவள்ட்ட என் நிலைமையை சொல்லி புரிய வையேன், அவள் என் மேல கோபமா இருந்தா என்னால வாழவே முடியாதுடா”

   

”நிறுத்துடா அப்படி என்ன பிரச்சனை உனக்கு”

   

”இதோ இதான் என் பிரச்சனையே“ என சம்யுக்தாவை காட்ட அதற்கு சிவா

   

”யார்டா இது”

   

”ஓ உனக்குத் தெரியாதுல்ல இவள்தான் சம்யுக்தா”

   

”யாரு அந்த ஜவுளிக்கடைக்காரன் பொண்ணா“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.