”நீங்க நிஜ போலீஸா” என கேட்க அவனோ சிரித்தபடியே
”ஏம்மா இப்படியொரு கேள்வி கேட்கற”
”பின்ன ஒரு தாதாகிட்ட உட்கார்ந்து பேசறீங்களே”
என அவள் கேட்கும் போதே சித்தன் வந்தான். கையில் பணத்தோடு வந்தான். அதை அப்படியே தில்லையிடம் தந்தான்
”ஏதுடா இது“
“அண்ணா எதிரியாளுங்க வந்த வண்டியில இருந்துச்சி, அவனுங்களுக்கு கருணா கொடுத்த பணம் போல, உன்னைப் போட்டுத்தள்ள 10 லட்சம் கொடுத்திருக்கான் அண்ணா“
”என்னது 10 லட்சமா, இவ்ளோதானா என் உயிருக்கு மதிப்பு சே, இன்னும் நான் டெவலப் ஆகலை போல இருக்கு சித்தா நாம நம்மளோட பரப்பளவை அதிகரிச்சிடனும்“
”அதுக்கென்ன அண்ணா ஆக்கிடலாம்” என சொல்ல அந்தப் பணத்தை அப்படியே சிவாவிடம் தந்தான் தில்லை
”இந்தா வைச்சிக்க, வழக்கம் போல என் மேல கேஸ் போடாத, இங்க நடந்த எதுவுமே வெளி உலகத்துக்கு தெரிய வேணாம், கன் ஷுட் நடந்தது பத்தி கூட யாருக்கும் தெரியாது, நீயும் சொல்லாத அப்படியே உன் மேலதிகாரி கேட்டாக்கூட எதையாவது பொய் சொல்லி சமாளிச்சிடு, இல்லைன்னா நான் இங்க இருக்கற விசயம் என் எதிரிங்க எல்லாருக்கும் தெரிஞ்சி போயிடும் சரியா”
”சரி சரி” என சொல்லிக் கொண்டே அந்தப் பணத்தை வாங்கி தன்னுடன் வந்த இன்னொரு போலீசிடம் தந்தான். அவனைக் கண்ட தில்லையோ