சுமி! அவனுடைய சுமி!
மனதை வருத்திய துக்கத்தின் பாரத்தை சமாளிக்க முடியாதவனாக மேலே எதுவும் பேசாமல் தளர்வுடன் மாடி ஏறி சென்றான்.
அவன் அந்த பக்கம் போன உடனேயே கவிதாவும், ரேஷ்மியும் மீண்டும் விளையாட தொடங்கினார்கள்.
“கவி, இப்போ தானே உங்க அண்ணன் திட்டிட்டு போறார்... கொஞ்சம் நேரம் இரண்டு பேரும் சும்மா இருங்க,” என்றாள் சுமித்ரா.
“அவன் எப்போ தான் கத்தாம இருந்திருக்கான், அதுக்காக பார்த்தா நாங்க எப்போ விளையாடுறது?” என்றாள் கவிதா!
“எதுக்காக இப்போ திட்டினார்?”
“பெருசா ஒரு காரணமும் இல்லை... ரேஷ்மி தெரியாம அவன் மேலே மோதிட்டான்னு அவளுக்கு திட்டு... நான் அவளுக்கு சப்போர்ட் செய்தேன்னு எனக்கு திட்டு...”
கமல் இது போன்ற காரணங்களுக்கு எல்லாம் கோபப் பட மாட்டானே என சுமித்ரா மனதினுள் குழம்ப, அதுவரை அமைதியாக இருந்த பூங்கோதை,
“அவனுக்கு யாரையாவது திட்டிட்டே இருக்கனும்... காரணம் எல்லாம் தேவையே இல்லை,” என்றாள்.
“ப்ச்... இல்லை அத்தை, எப்போவுமே அவர் கோபத்துக்கு பின்னால சின்னதாவாவது ஏதாவது காரணம் இருக்கும்... நல்லதை சொல்றதை தான் அவர் அவர் ஸ்டைல்ல கோபமா சொல்லுவார்.”
“ப்ளாக் & ஒய்ட் ஹீரோயின் எல்லாம் உங்க கிட்ட தோத்து போயிட்டாங்க அண்ணி...