“அப்பா!”
“உன் பிறந்த நாளுக்கு உனக்கு பிடிச்ச ஃப்ராக் யாரு வாங்கி கொடுத்தது?”
“அம்மா!”
“ஹேய், அம்மாவா?”
“சரி, அம்மா, அப்பா ரெண்டு பேரும்!”
“பாப்பாக்கு பிடிச்ச டாய்ஸ் எல்லாம் யாரு வாங்குறது?”
“அப்பா!”
“அப்போ அப்பா பாப்பாவை செல்லம் கொஞ்சுவாரா இல்லையா?”
“ம்ம்ம்ம்,” என யோசித்த ரேஷ்மி,
“நான் போய் அப்பாவை கூப்பிட்டு வரேன்,” என்று சொல்லி விட்டு சென்றாள்.
“பார்த்து படிக்கட்டு ஏறு,” என்ற சுமித்ராவின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது.
அவளுடைய நகலாக இருக்கும் மகளிடம் கமலுக்கு பிரியம் அதிகம் என்பது சுமித்ராவிற்கு தெரியும்.
அந்த நினைப்பே கணவன் அவள் மீது வைத்திருக்கும் அன்பை சொல்ல, அவனை பற்றி நினைத்தபடி இரவு உணவுக்கு எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்தாள்.
இன்னும் சில நிமிடங்களில் மகளை கையில் தூக்கிக் கொண்டு வருவான் என கணவனுக்காக அவள் காத்திருக்க, ரேஷ்மி ஒரு சில நிமிடங்களில் தனியாக வந்தாள்.