(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

   

கலாவின் மடியில் படுத்து தூங்குவது, கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சுவது, தன் மனதில் இருப்பதை பகிர்ந்துக் கொள்வது என அனைத்தையும் செய்வாள்.

   

இப்போதும் தன்னைக் கட்டி அணைத்துக் கொண்டிருந்த ரோஹினியின் வருத்தம் புரிந்தவளாக, அன்புடன் அவளின் முதுகில் மெல்ல தட்டிக் கொடுத்தாள் கலா.

   

“கலாம்மா... உடனே கல்யாணம் செய்துக்கோன்னு கம்பல் செய்றாங்க... எனக்கு பிடிக்கவேயில்லை,” என்றாள் ரோஹினி கலக்கத்துடன்!

   

“விக்ரம் ரொம்ப நல்லவர் ரோ... உனக்கே தெரியும்...”

   

“அதில்லை இப்போ பிரச்சனை! எனக்கு இப்போ கல்யாணம் செய்துக்க விருப்பமில்லை!”

   

“நிச்சயத்தை தானே உடனே வைக்கனும்னு சொல்றாங்க... கல்யாணத்தை உனக்கு பிடிச்சப்போ தான் வைப்பாங்க...”

   

“எனக்கு பிடிக்கலை கலாம்மா,” என பிடிவாதத்துடன் சொன்ன ரோஹினி, கூடவே, “இப்படில்லாம் என்னை தொல்லை செய்துட்டே இருந்தா அப்புறம் நான் செத்துப் போயிடுவேன்,” என்றாள் வீறாப்புடன்!

    

அதிர்ந்துப் போனவளாக, “ரோ!!! என்ன பேசுற? இப்படி எல்லாம் நினைக்கவே கூடாது,” எனக் கண்டித்தாள் கலா.

   

இளம்பெண்ணாக வளர்ந்திருந்தாலும் ரோஹினி மனதினுள் இன்னும் சிறுக் குழந்தை தான் என்பது கலாவிற்கு புரிந்தது.

   

இவளால் தனியாக இந்த தீவின் அரசியாக செயலாற்ற முடியுமா???

   

கலாவிற்கும் சந்தேகமாக தான் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.