(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

   

“என்ன செய்ய போற???”

   

“அரண்மனைல இருந்து ஓடிப் போக போறேன்!”

   

“என்னது???”

   

“ஆமாம் கலாம்மா, நான் இங்கே இருந்தா தானே நிச்சயம், கல்யாணம்னு பேசுவாங்க. நான் இல்லைனா என்ன செய்வாங்க?”

   

“நீ இந்த தீவோட இளவரசி ரோஹினி!”

   

“ஆனால் எனக்கு இப்போ இந்த அரண்மனை சூழல்ல இருந்து மாற்றம் வேணும் கலாம்மா... கல்யாணம் பிடிக்கலை அதனால போறேன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு போறேன். ரோஷன் தாத்தா புரிஞ்சுப்பார். அவரே விக்ரமோட மனசையும் மாத்துவார். அப்படி அவங்க மனசு மாறினதுக்கு அப்புறமா நான் திரும்பி வரேன்.”

   

“ஆனா நீ எங்கே போவ ரோ கண்ணா? உனக்கு ஃப்ரென்ட்ஸ்ன்னு வெளியே யாராவது இருக்காங்களா?”

   

இல்லை என தலை அசைத்தாள் ரோஹினி. அவளுடைய உறவு, நட்பு என அனைத்துமே அந்த அரண்மனைக்குள் மட்டுமே இருந்தது!

   

யாரும் இல்லாத அனாதையாக உணர்ந்தவளின் கண்ணில் இருந்து மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது!

   

அதை பார்த்து மனம் உருகிப் போனாள் கலா.

   

அவளால் ரோஹினியின் மனதை புரிந்துக் கொள்ள முடிந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.