(Reading time: 7 - 13 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

   

✽✽✽

   

காரில் இருந்து இறங்கிய மித்ரன், தன்னுடைய மிடுக்கான நடையுடனே “ஃபோகஸ் எலெக்ட்ரானிக்ஸ்” என்ற பெயர் பதிக்கப் பட்டிருந்த கட்டிடத்தின் உள்ளே சென்றான். கேட் செக்யூரிட்டி ஃபோன் செய்து சொல்லி இருந்ததால் அவன் யாரென்பதை அறிந்திருந்த ஃபிரன்ட் டெஸ்க் செக்யூரிட்டி, அவனிடம் எந்த கேள்வியும் கேட்காமல் மைத்ரேயியின் அறை இருந்த திசையைக் காட்டினாள்.

   

கவனமாக அதைக் கேட்டுக் கொண்டு நேராக மைத்ரேயியின் அறையை அடைந்த மித்ரன், பேருக்கு மெல்ல தட்டி விட்டு கதவை திறத்து உள்ளே சென்றான்.

   

செக்யூரிட்டியின் மூலம் அண்ணனின் வருகையை முன்பே அறிந்திருந்த மைத்ரேயி, “என்ன அண்ணா, திடீர் ஆஃபிஸ் விஜயம்?” என்றாள்.

   

“உன் ஆஃபிஸ் பார்க்க எல்லாம் வரலை... இந்த சைட் ஒரு வேலை இருக்கவே, உன்னோட ஜெயந்த் பர்த் டே வருதே அதை பத்தி பேச வந்தேன்... ஜெயந்த்க்கு என்ன கிஃப்ட் வாங்குறதுன்னு ஒரு க்ளூவும் இல்ல,” என்றான் மித்ரன்!

   

ஜெயந்த் என்ற உடன் தங்கை முகத்தில் வந்த அந்த ‘பளிச்’சை ரசித்தபடி அவன் அவளின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து ஜெயந்திற்கு பிடித்த விஷயங்கள் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க, கதவு தட்டும் ஓசையும்,

   

“மே ஐ கம் இன் மேம்” என்றுக் கேட்ட சரண்யாவின் குரலும் கேட்டது.

   

வேண்டாம் என்று சொல்ல முடியாமல் மைத்ரேயி அமைதியாக இருக்க, சரண்யா கதவை திறந்து உள்ளே வந்தாள்.

   

அறையில் இருந்த மித்ரனை பார்த்து ஒரு வினாடி திகைத்து போனாள் சரண்யா.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.