(Reading time: 7 - 13 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

   

“மைத்தி, ஒரு நல்ல அண்ணனா சொல்றேன்... ஜஸ்ட் கெட் ரிட் ஆஃப் ஹேர்... ஷி இஸ் வேஸ்ட்,” என்றான் மித்ரன் இளக்காரமாக!

   

“எனக்கு உன்னை புரிஞ்சுக்கவே முடியலைண்ணா... சரண்யா நீ வாங்கின கம்பெனில இருந்தப்போ அவளை உனக்கு பிடிக்காமல் போனதை கூட என்னால புரிஞ்சுக்க முடியுது... இப்போ தான் அவ அங்கே இருந்து வந்துட்டாளே... அப்புறமும் என்ன?”

   

“அப்படி போறவ ஏன் என் தங்கை கம்பெனில ஜாயின் செய்யனும்...? உலகத்துல வேற கம்பெனியா இல்ல?” கடுப்புடன் கேட்டான் மித்ரன்.

   

“நான் உன் தங்கைன்னு சரண்யாக்கு இன்னும் தெரியாது... நீ புரியாமல் பேசுற...”

   

பேசியபடி இருவரும் மற்றவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு பக்கத்தில் வந்திருந்தார்கள்...

   

மைத்ரேயி சொன்னதை கேட்டு அவள் பக்கம் கோபமாக பார்த்த மித்ரன், “என்னவோ செய்...” என்று சொல்லி விட்டு சென்றான்...

   

மைத்ரேயி அவன் நடந்து செல்வதையே யோசனையுடன் பார்த்திருந்தாள்...

   

சிறு வயதில் பாசத்துடன் வழி நடத்திய அண்ணன் எப்படி மாறி போய் விட்டான்... அப்போதெல்லாம் மித்ரனுக்கு கோபம் என்ற ஒன்று வரவே வராது என்று அவளுக்கு தோன்றும்...

   

இப்போதோ கோபம், குரோதம், மற்றவரை மட்டம் தட்டும் பேச்சு என தலை கீழாக நடந்துக் கொண்டிருக்கிறான்...

   

ஒரு பெருமூச்சுடன் அவளுடைய செக்ரட்டரி வெண்ணிலாவின் க்யூபின் பக்கமாக சென்றாள்...

   

“மேம்... அவர் தான் உங்க அண்ணனா மேம்?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.