உன்கிட்ட நான் மாட்டி சிக்கி சின்னாபின்னமானதே போதும், அவனை விட்டுடும்மா புள்ளை குட்டிக்காரன் பாவம்” என சொல்ல அவளோ இருவரையும் கோபமாக முறைத்தாள்.
”தில்லை இன்னும் எதுக்காக இவளை கூட்டிட்டு சுத்தற, அதுவும் என்னடா இது, அந்த பொண்ணோட ட்ரஸ்சும் நகைகளும் பார்க்கவே கல்யாண பொண்ணு போல, இப்படியே நீ இவளோட சுத்தினேன்னு வையேன், கண்ணு, காது, மூக்கு வைச்சி கதையே கட்டிடுவாங்க, அப்புறம் உன் ஆளுன்னு நினைச்சி இவளை பணயமாக மாத்தி உன்னை எதிரிங்க போட்டுத்தள்ளிட போறாங்க பார்த்துக்க”
”அப்படியெல்லாம் நடக்காது. என்னை நெருங்க யாராலயும் முடியாது, இவளும் என்கூடதானே இருக்கா என்னை நெருங்கவே யாராலயும் முடியாதுங்கறப்ப இவகிட்ட யாரு நெருங்குவா”
”இருந்தாலும் இது ரிஸ்க்தான், என்னதான் இருக்கோ உங்களுக்கு நடுவுல”
”இவள் இப்ப எனக்கு பர்சனல் ஆயிட்டா, என்ன செய்றதுன்னு தெரியலை அதான் கூட்டிட்டு சுத்தறேன்”
”அடப்பாவி உனக்கு இது தேவையா, உன் உசுரே ஊசலாடிக்கிட்டு இருக்கு இதுல ஒரு பொண்ணோட வாழறது எப்படிடா நியாயம், இந்த தொழிலையும் விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டியா என்ன”
”ஏன்டா பர்சனல்னா அதுக்கு வேற அர்த்தம் இருக்கு, நீ ஒண்ணு, நான்லாம் யாருக்காகவும் எதுக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன்”
”சந்தோஷம் மாத்திக்காத இப்படியே இரு, அப்பதான் என்னால நிம்மதியா இருக்க முடியும்” என சொல்லியவன் சம்யுக்தாவை ஏற இறங்கப் பார்த்தான்.
”இப்படியேவா இவளை கூட்டிட்டு எல்லா இடத்துக்கும் சுத்தறியே, எனக்கொன்னும் சரியா படலை என்னவோ போ, அப்புறம் உங்களுக்குள்ள ஏதாவது ஆச்சின்னா அது எதுவாயிருந்தாலும் முன்னாடியே சொல்லிடு, அதுக்கான ஏற்பாடுகளையும் நான் செய்றேன்”