”அப்படி எதுவும் நடக்காது, எனக்கும் இவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவளுக்கான நியாயத்தை நான் வழங்கிட்டா என்னை விட்டு அவள் போயிடுவா”
”என்னவோ செய், நான் ட்யூட்டிக்கு கிளம்பறேன்” என சொல்ல அவனோ
”இருடா உன்னை நம்பி நான் வந்தா, நீ பாட்டுக்கு கிளம்பற, கொஞ்ச நேரம் சம்யுக்தாவை பார்த்துக்க”
”ஏன் உன்னால பார்த்துக்க முடியாதா“
”இருடா டாக்டரை பார்த்துட்டு வரேன்”
”அவ்ளோதானே இரு நானே கூப்பிடறேன்” என சொல்ல அந்நேரம் 5 வயது குட்டிப்பெண் ஒருத்தி ஓடி வந்தாள்.
”அப்பா அப்பா” என வந்தவள் அங்கிருந்த தில்லையை கண்டதும் முகமலர்ந்து
”ஐ தில்லை” என அழைத்தபடியே வந்து அவனிடம் ஒட்டிக் கொள்ள அதுவரை அவனுக்கு இருந்த உடல் வலி காணாமலே போய்விட்டது. அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்
”ஓய் கீதா எப்படியிருக்க” என கேட்க
”நான் நல்லாயிருக்கேன் தில்லை” என சொல்ல அவனோ அவளைப் பார்த்தான் பள்ளி சீருடையில் இருந்தாள்
”இன்னுமா நீ ஸ்கூலுக்கு கிளம்பலை”
”போகனும் அப்பா கூட்டிட்டுப் போவாரு” என்றாள் மழலை மொழியில்