”ப்ச் முடியாது இன்னிக்கு நான் கீதாகூடதான் இருப்பேன்“
”ப்பா உன்னை கூப்பிட்டதே தப்பா போச்சி, இறக்கிவிடுடா அவளை” என சொல்லிக் கொண்டே கீதாவிடம் வந்தான் சிவா
”கீதா இறங்கு“
”முடியாது நான் தில்லையோடதான் இருப்பேன்”
”ப்ச் இறங்குன்னு சொன்னா கேட்க மாட்டியா நீ, ஸ்கூல்ல டெஸ்ட் இருக்கு மறந்துட்டியா”
“ம்ஹீம் நான் ஸ்கூல் போக மாட்டேன், நான் தில்லைகூடதான் இருப்பேன்” என சொல்ல தில்லையோ
”எதுக்குடா இப்ப குழந்தையை மிரட்டற, அவ்ளோ துணிச்சலா உனக்கு, என் பொண்ணு இவள் இவளை அதட்டின உன் தோலை உரிச்சிடுவேன்”
”அம்மாவுக்கும் பொண்ணுக்கும் என்னை விட இந்த இத்துப்போனவனைதான் பிடிச்சிருக்கு, அப்படி என்னதான் செஞ்சி வைக்கறானோ” என சிவா புலம்ப
”உன்கேன்டா பொறாமை ஆமா எங்க இவள் அம்மாவை காணலை”
”கிச்சன்ல இருக்கா” என சொல்லிய சிவா உடனே தன் மனைவியை அழைத்தான்
”ஜனனி ஜனனி இங்க வந்து பாரு, யார் வந்திருக்காங்கன்னு” என சொல்லி முடிக்கும் முன்பே 2 கப் காபியுடன் வந்து நின்றாள்.
தில்லையின் பேச்சுக் குரல் கேட்டதும் அவனுக்கும் சேர்த்து காபி போட்டவள் கூட சம்யுக்தா இருப்பதைக் கண்டு திகைத்தாள்