(Reading time: 6 - 11 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”அவன் கிடக்கறான் வா நான் உன்னை கூட்டிட்டுப் போறேன், போற வழியில நீ கேட்கற எல்லாத்தையும் நான் வாங்கித் தரேன் வா”

   

”எல்லாமா”

   

”ஆமாம் எல்லாம்தான்”

   

”என்ன வாங்கித்தருவ”

   

”சாக்லேட், பிஸ்கேட், கேக், ஐஸ்க்ரீம்”

   

”ஐஸ்க்ரீமா” என ஆவென சொல்ல

   

”ஆமாம் எவ்ளோ வேணும்னாலும் வாங்கித்தரேன் என்கூட வர்றியா” என அழைக்க அவள் உடனே சரியென தலையாட்டினாள். அவளை தூக்கிக் கொண்டான் தில்லை. அதைக் கண்ட சிவாவோ

   

”டேய் அவளை விடுடா, பரிட்சை இருக்கு, இப்ப போய் கண்டதெல்லாம் வாங்கித்தராத, அவளுக்கு உடம்பு சரியில்லாம போயிடும்”

   

”என் கீதாவுக்கு நான் வாங்கித் தரேன், உனக்கென்ன வந்தது, உன் வேலை என்னவோ அதை போய் பாரு போ” என சொல்ல அவனோ

   

”வேணாம்டா அவள் அம்மாவுக்கு தெரிஞ்சது அவ்ளோதான் கொன்னுடுவா”

   

”என்னை எதுவும் செய்யமாட்டா”

   

”உன்னையில்லை என்னை சொன்னேன், அவளை விடு நான் அவளை கூட்டிக்கிட்டு கிளம்பறேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.