தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 40 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
உதயின் காதில் இருந்து புகை வருவதாய் கற்பனை செய்து துளசி சிரிக்க, மறுபக்கம் இருந்து, “அண்ணி!” என் அலறினான் அவன்!
“அலறாதே! காது போச்சு... திரிஷா இல்லைனா நயன்தாரா ரேஞ்சுக்கு நீ இன்னும் வரலை போலிருக்கே,” என இப்போதும் தன் கேலியை தொடர்ந்தாள் துளசி.
“எனக்கு அதெல்லாம் தேவை இல்லை... என்னோட நந்திதா போதும்... மேடம் என்ன சொல்றாங்க...”
“ஹாங்.... சிச்சுவேஷன் பாட்டு பாடுறா...!”
“என்ன பாட்டு”
“...’நதியில் தெரியும் நிலவின் உருவம் நதிக்கு சொந்தமில்லை....’ யாம்.....!”
“கலக்கல்ஸ்! என் நதியை தவிர வேற யாராலேயாவது இப்படி ஆப்ட்டா யோசிக்க முடியுமா???”
“கஷ்டம்ப்பா! அது யாரோ எழுதின சினிமா பாட்டு...”
“ஆனால் அதை இப்படி யூஸ் செய்யவும் டேலன்ட் வேணும்ல!”
“ஹையோ என்னால முடியலை...”
“நீங்க என்ன செய்யுங்க உங்க ஃப்ரென்ட் கிட்ட நான் சொல்ற பதில் பாட்டை சொல்லுங்க... இதழ்கள் பொய் சொல்லும் இதயம் மெய் சொல்லும் தெரியாதா உண்மை தெரியாதா???”
“அம்மாடியோ! லவ் செய்றது கூட ஈசி! இந்த மீடியேட்டர் வேலை தான் கஷ்டம்...! எனக்கு இதெல்லாம் வேண்டாம்... எப்படி என் கிட்ட சொல்லாம நேரா அவக் கிட்ட போய் உன்