விடுதலை...! எனக்கு என்னோட நதி...”
“கேட்கும் போது ஈசியா தான் இருக்கு... செய் செய்... ஆல் தி பெஸ்ட்...”
“தேங்க்ஸ் அண்ணி...”
ஃபோனை கட் செய்து அதை சரத்திடம் கொடுத்து விட்டு அவனை உரசிக் கொண்டு அமர்ந்தாள் துளசி...
அவளுக்கு வசதியாக இருக்க இன்னும் நெருங்கி அமர்ந்த சரத், “என் துளசி ரொம்ப டையர்ட் போல இருக்கு,” என்றான் அவளை விழிகளால் ஆராய்ந்துக் கொண்டே!
“ஆமா சரத்... நீங்க வேலைக்கு போய் எட்டு மணி, நேரம் ஒன்பது மணி நேரம் செய்ற வேலைல கூட இப்படி டையர்ட் ஆக முடியாது... இந்த உதய் – நந்திதா லவ்வுக்கு நடுவே மாட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே...”
துளசி பேசிக் கொண்டே போக, சரத் குனிந்து அவளின் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான்...
“என்னோட துளசியோட டையர்ட்னஸ் போக இது என்னோட ஸ்பெஷல் டானிக்....”
மெல்லியதாக வெட்கப் பட்ட போதும்,
“தேங்க்ஸ் சரத்... எனக்கு இந்த எனெர்ஜி பூஸ்ட்டர் ரொம்பவே தேவை...! இன்னும் ஒன்னு,” என்றாள் துளசி...
அவள் மறு கன்னத்தை திருப்பி காட்டும் அவசியமே இல்லாமல் சந்தோஷமாக குனிந்து மறு கன்னத்தில் முத்தமிட்ட சரத்,
“இதுக்காகவாவது அவங்க லவ் இன்னும் கொஞ்ச நாள் ஜவ்வு போல இழுக்கலாம் போலிருக்கே.... என்னால முடிஞ்சதை செய்றேன்,” என்றான் கேலியாக!