(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

லவ்வை சொன்னீயோ, அப்படியே இதையும் சொல்லிக்கோ...”

   

“கோபப் படாதீங்க அண்ணி... அம்மா கிட்ட ஒன் வீக்ல அவங்க மருமகளை இன்ட்ரோ செய்றேன்னு சொல்லி இருக்கேன்...”

   

“க்கும்... அவங்களுக்கு தெரியாதாக்கும்...! நந்து ஏன் ரிசைன் பண்றேன்னு சொல்றான்னு யோசிச்சீயா?”

   

“அது புரியாம தானே உங்க கிட்ட கேட்குறேன்...”

   

“எல்லாம் உன் அம்மாவின் தயவு தான்...”

   

முன்தினம் ரேவதி நந்திதாவிடம் வீடு தேடி வந்து கத்தி விட்டு சென்றதை விவரித்தாள் துளசி...

   

“...ஏதோ அந்த டைம்ல அத்தை இருக்கவே நந்து தப்பிச்சா...”

   

“அடடா! எனக்கு இது தெரியாதே...! ஐ ஆம் சாரி அண்ணி... ஆனால் அம்மாக்கு எப்படி தெரியும்??? ஓ! மை காட்... அந்த ப்ரியா நான் யோசிச்சதை விட ஸ்மார்ட்... அவ தான் போட்டுக் கொடுத்திருக்கனும்...”

   

உதய் உண்மையான வருத்தத்துடன் பேசிக் கொண்டிருக்க, “இருக்கலாம் உதய்... ஆனா அது இப்போ முக்கியமில்லை... நீ ப்ரொபோஸ் செய்தாச்சு, அவ வேலையை ரிசைன் செய்தாச்சு... அவ்வளவு தான்... இதுக்கு மேல் என்ன செய்றதுன்னு யோசி,” என்றாள் துளசி.

   

“யோசிக்க எதுவுமில்லை அண்ணி... நதி தான் என் ஒய்ஃப்...”

   

“நினைப்பு தான்...”

   

“நடக்குறதை மட்டுமே நினைக்குறவன் நான்...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.