“செய்வீங்க! செய்வீங்க!!!! அப்புறம் என் கிட்ட இருந்து அடி வாங்குவீங்க!”
“அதெல்லாம் நான் தாங்குவேன்...! என் துளசி இப்படி கட்டி பிடிச்சு கிஸ் செய்ங்கன்னு வேற எப்போவாவது கேட்டதா சரித்திரம் இருக்கா???”
“சரத்,” என்ற சிணுங்கலுடன் கணவனுடன் மேலும் இழைந்தாள் துளசி...!
அதற்கு மேல் அவர்கள் இருவரும் ஏன் நந்திதா உதயை பற்றி நினைக்க போகிறார்கள்!!!!!
✽✽✽
துளசியிடம் பேசி விட்டு ஃபோனை கீழே வைத்த உதயின் முகத்தில் மந்தகாச புன்னகை இருந்தது...!
எத்தனை அழகாக மனதில் இருப்பதை கோடிட்டுக் காட்டி இருக்கிறாள் நந்திதா...
அவளின் மனதில் அவன் இருந்தாலும், அவன் அவளுக்கு சொந்தமானவன் இல்லையாம்...
சீக்கிரமே சொந்தக்காரன் ஆகிறேன் டார்லிங்...!
உதய் கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்...!
நமக்கு நிறைய நம்பர் எல்லாம் வேண்டாம்... ஒன்னே ஒன்னு போதும்...
ஒன்...
நேரத்தை வீணாக்காமல், நேராக ரேவதியின் அறைக்கு சென்றான்....
அங்கே ப்ரியா ரேவதிக்காக ஏதோ புத்தகத்தை சத்தமாக படித்துக் கொண்டிருந்தாள்.