Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 40 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சிவாவின் விட்டை விட்டு வெளியேறி வந்தவன் தன்னுடைய ஜீப் அங்கு இல்லாமல் போகவே அதிர்ந்தவன் அக்கம் பக்கம் பார்த்தான் தில்லை. அந்த வீட்டில் இருந்த கார் ஷெட்டில் அவனது ஜீப் இருந்தது, அதை பெரிய துணியால் போர்த்திவிட்டு சிவா சென்றிருந்தான். அவனது ஜீப்பை வைத்து எதிரிகள் வரக்கூடாதென எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தான். அதைக் கண்ட தில்லையும் தனது ஜீப்பை எடுத்துக் கொண்டு வேலைக்காரியிடம் தாங்கள் செல்வதாக ஜனனியிடம் சொல்லிவிட சொல்லிவிட்டு சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
”எங்க போறீங்க”
“வீட்டுக்கு”
”பாட்டிகிட்ட போகலையா”
“இல்லை”
”ஏன்”
”முதல்ல நான் குணமாகனும், அப்புறம்தான் பாட்டியைப் போய் பார்ப்பேன்” என சொல்ல அவளோ
”எனக்கு எங்கப்பா ஞாபகம் வருது”
”சரி நான் வேணா உன்னை பஸ் ஏத்தி விடறேன் போய் சேரு”
”முடியாது”
”உன்னை ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்காங்க, இதுக்கப்புறம் உன்கிட்ட பேசறது வேஸ்ட், உன் வாழ்க்கையை நீயேதான் அழிச்சிக்கற, நான் கிடையாது” என கோபமாகச் சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டினான்.