பாதிக்கனும் அவளை நான் விரும்பலைன்னாலும் என்னை விரும்பின பொண்ணை அதுவும் என் தோழியை அவ்ளோ சீக்கிரம் மறக்க என்னால முடியலை”
”ஓஹோ அதுக்குதான் இந்த ரிங்டோனை வைச்சிருக்கீங்களா”
”இந்த ரிங்டோன் வெச்சதே அவள்தான், அப்ப நாங்க நண்பர்களா இருந்தோம், நானும் சாதாரணமானவனா இருந்தேன், அப்புறம் தாதாவானேன் ஏனோ இந்த ரிங்டோன் பழகிடுச்சி, எனக்கு பிடிச்சிருந்தது. யாரும் இல்லாத எனக்கு ஒரு தோழியிருக்காங்கற உணர்வு தைரியத்தைத் தந்தது அதனால அப்படியே விட்டுட்டேன்”
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
அவன் பேசும் போதே மறுபடியும் போன் வர அவசரமாக எடுத்துப் பேசினான்
”ஹலோ யாரு? ஆமாம், என்ன? அப்படியா, எங்க? யார் யாரு? 2 பொண்ணுங்களா சரி எவ்ளோவாம், 2 கோடியா அவ்ளோ ஒர்த்தா, அப்படியா, பெரிய தொழிலதிபர் சூப்பர் சூப்பர் சரி பணம் கைமாறிச்சா, இன்னும் இல்லையா ஓ இப்பதானா, இப்ப என்ன அந்த 2 பொண்ணுங்கதானே, சரி எந்த காலேஜ் ஓ ஸ்கூலா அப்ப ஈசிதான், நான் பார்த்துக்கறேன் இல்லை நான் பார்த்துக்கறேன், 2 பொண்ணுங்களுக்கு 2 கோடி, எதுக்கும் அதுக்கு மேல பணம் கேட்க முடியுமான்னு, அப்படியா சரி சரி விடு நான் பார்த்துக்கறேன்” என சொல்லி போனை கட் செய்தவன் உடனே பாதையை மாற்றிக் கொண்டு வேறு பக்கம் சென்றான்
”இப்ப எங்க போறீங்க”
”ஒரு வேலை வந்துடுச்சி, அதுக்காக போறேன்”
”அதான் என்ன வேலை”