”அண்ணா பொண்ணுங்க ரெடி”
”வண்டியில ஏத்து” என கட்டளையிட உடனே ஜீப்பிடம் வந்தவன் கடைக்குள் மீண்டும் ஓடிச் சென்று 2 பெண்களை அழைத்து வந்தான்.
பள்ளி சீருடையில் மயக்க நிலையில் இருந்த பெண்களை 2 ஆட்கள் தூக்கிக் கொண்டு வந்து வண்டியின் பின் சீட்டில் ஏற்றிவிட்டு அங்கிருந்து ஓடிவிட தில்லையும் வண்டியை தனது வீட்டை நோக்கி பறக்கவிட்டான்.
சம்யுக்தாவிற்கு தில்லையின் இந்தச் செயல் பிடிக்காமலே போனது, பின் சீட்டில் மயக்க நிலையில் இருந்த பெண்களைக் கண்டு இரக்கப்பட்டாள். கோபமாக தில்லையின் கன்னத்தில் அறைய அவனுக்குத் திக்கென்றது
”எதுக்குடி அடிச்ச”
”சின்ன பொண்ணுங்களை கிட்நாப் பண்ணியிருக்கியே உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா”
”2 கோடி சும்மா வருமா உனக்கு“
”பணத்துக்காக இவ்ளோ தூரம் நீ இறங்குவியா”
”ஆமாம் பணத்துக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன், உனக்கென்ன”
“என்னை மட்டும் ஏன் விட்டு வைச்சிருக்க, என்னையும் வைச்சி ஏதாவது செய்ய வேண்டியதுதானே, பணத்தை சம்பாதிக்க வேண்டியதுதானே”
”நீயாதான் என்னை தேடி வந்த, நியாயம் கேட்டு வந்த பொண்ணை அடைக்கலமா பார்த்துக்கனும் அதான் செய்றேன்”