Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 13 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஒரு சில வினாடிகளுக்கு பிறகே இயல்பு நிலைக்கு திரும்பிய ஆகாஷ்,
“என்னம்மா யோசிச்சு பேரு வச்சிருக்கீங்க மிஸ் சினேகா! நம்ம இரண்டு பேருக்கு நடுவே நல்ல sync இருக்கு! நானும் கூட உங்களை போல சில டைம் யோசிச்சிருக்கேன்... அப்படி நான் யோசிச்சு கண்டுபிடிச்ச ஒரு ஸ்பெஷல் நேம் FRAUD. ஆனால் unfortunately, இது வரைக்கும் அந்த ஸ்பெஷல் பெயருக்கு ஏத்த மாதிரி ஒருத்தரையும் நான் சந்திக்கலை. இன்னைக்கு தான் அந்த லெவல்ல இருக்க உங்களை கண்டுபிடிச்சிருக்கேன்,” என்றான் நக்கலாக!
“ஃப்ராடா??” என சினேகா கேட்கும் போதே ஆகாஷின் மொபைல் ஒலித்தது.
அதை கையில் எடுத்தவன், சினேகாவிடம்,
“இப்போ நான் போகனும் சினேகா. இன்னொரு நாள் டைம் கிடைக்கும் போது உங்களுக்கு நான் வச்ச பேரை பத்தி எக்ஸ்ப்ளைன் செய்றேன். அப்புறம், லீவ் நாள் முழுக்க இப்படி வேலையை பத்தி யோசிக்காம என்ஜாயும் செய்ங்க. பை,” என்று சொல்லி விட்டு கிளம்ப திரும்பினான்.
அப்போது மகாலக்ஷ்மி அவன் கண் பார்வையில் படவும், அவளை பார்த்து நட்புடன் புன்னகைத்து,
“உங்க ஸ்மார்ட் ஃப்ரென்ட் கூட உங்களையும் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்,” என்று சொல்லி விட்டு சென்றான்.
ஆகாஷ் கண் பார்வையில் இருந்து மறையும் வரை அமைதியாக இருந்த சினேகா,
“என்னை பார்த்து ஃபிராடுன்னு சொல்லிட்டு போகுது அந்த லூசு.... உர்ர்ரர்ர்ர்...” என்றாள் கோபத்துடன்!
மகாலக்ஷ்மிக்கு சிரிப்பு தான் வந்தது!
“நீ அவரை லூசுன்னு சொன்ன, அவர் உன்னை ஃபிராடுன்னு சொன்னார்! சரியா போச்சு