பெரிது படுத்தாமல்,
“இன்னும் நிறைய இருக்கு... எவ்வளவு வேணா சாப்பிடுங்க,” என்ற சுபாஷினி, ஏதோ நினைவு வந்தவளாக,
“அதென்ன ஆகாஷ் நான் வரும் போது ஸ்மைல் செய்துட்டு இருந்த... ஏதாவது ஜோக் படிச்சீயா???” என்று மகனிடம் கேட்டாள்.
“இல்லம்மா... இன்னைக்கு மால்ல நடந்ததை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்,” என்றான் ஆகாஷ் புன்னகை மின்ன!
“அப்படி என்ன சிரிக்குற அளவுக்கு நடந்துச்சு???”
“நம்ம மால்ல ஒரு மல்டி லெவல் பார்க்கிங் லாட் கட்டலாம்னு இருக்கேன்... அதுக்கு ஹெல்ப் செய்ய ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில இருந்து என் ஆஃபிஸ்க்கு ஒரு பொண்ணு வந்திருக்கா... அவ பேரு சினேகா... சின்ன பொண்ணு... நான் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவங்களா எதிர்பார்த்தேன்னு அவக் கிட்ட சொன்னேனா... காச் மூச், காச் மூச்ன்னு பேசிட்டா...”
“அதை கேட்டுட்டு நீ சும்மாவா இருந்த? உடனே கிளம்புன்னு அனுப்பி வைக்க வேண்டியது தானே?”
மனைவி சொன்னதை கேட்டு மறுப்புடன் தலை அசைத்த பிரகாஷ், “இல்லை சுபா.. அது சரியில்லை,” என்றார். அப்படியே மகனிடம், “ஆகாஷ், உனக்கு அவ எக்ஸ்பீரியன்ஸ் குறைவா இருக்கிறதா தோணி இருந்தா, அவ கிட்ட நேரா சொல்லி இருந்திருக்க கூடாது... அந்த கம்பெனிக்காரங்க கிட்ட உன் ஆஃபிஸ்ல இருந்து பேச சொல்லி இருக்கனும்...! அந்த பொண்ணும் இன்னும் மரியாதை கொடுத்து பேசி இருந்திருக்கலாம்,” என்றார்!
“அவ வேற எதுவும் சொல்லலைப்பா... என் வொர்க் பார்த்துட்டு முடிவெடுங்கன்னு சொன்னா... இந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி அஸ்வத் சார் ரெகமென்ட் செய்தது... அவர் ரெகமென்ட் செய்ற அளவுக்கு அவருக்கு ப்ளான் போட்டு கொடுத்திருந்தது இந்த சினேகா தான்...”