(Reading time: 8 - 15 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

தானே!!!! ஆனாலும் உனக்கு என்னே ஒரு மூளை சினேகா! எப்படி அவ்வளவு ஃபாஸ்ட்டா லாஜிக்கல் அது இதுன்னு யோசிச்ச???”

   

“எனக்கே தெரியலைக்கா! ஒரு ஃப்ளோல வந்துச்சு... எனக்கு அப்புறமா ஞாபக படுத்துங்க, என் ஹை-ஸ்கூல் ஈங்களிஷ் மிஸ்க்கு ஒரு கிஃப்ட் அனுப்பி வைக்கனும்!”

   

“ஹா ஹா ஹா! நல்ல பொண்ணு நீ! உன்னை மாதிரியே யோசிச்சேன்னு சொன்னாரே, ஃபிராடுக்கும் அவர் இந்த மாதிரி ஏதாவது யோசிச்சு வச்சிருப்பாரோ?”

   

“ஹ்க்கும்... யோசிச்சிட போறார்! சரியான லூசு! லூசு லூசு!!!!!”

   

“ஹேய் சினேகா, அங்கே பாரு ஆகாஷ்....!”

   

“ஹையோ எங்கே... சார்... ஆகாஷ் சார்,” என திகைப்புடன் திரும்பிய சினேகா, மகாலட்சுமி சத்தமில்லாமல் சிரிப்பதை அப்போது தான் கவனித்து அவளை பார்த்து முறைத்தாள்.

   

“இவ்வளவு பயத்தை மனசுல வச்சுட்டு, இந்த கெத்து, நக்கல்ஸ், நையாண்டி எல்லாம் உனக்கு தேவை தானா சினேகா????”

   

“உங்க பேச்சு நான் கா... போங்க,” என்று சொல்லி விட்டு கோபமாக நடந்த சினேகாவுடன் இப்போதும் சிரிப்புடன் கூட நடந்தாள் மகாலக்ஷ்மி.

   

✽✽✽

   

ஜோதியை வீட்டில் ட்ராப் செய்து விட்டு, சுபாஷினியுடன் வீடு திரும்பியதும், மீண்டும் வீகென்ட் ரிலாக்ஸிங் மோடிற்கு (mode) தன்னை செட் செய்துக் கொண்டான் ஆகாஷ்!

   

லிவிங் ரூமில் இருந்த பெரிய டிவியில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது...

   

பிரகாஷ் ஒரு மேகசினை புரட்டியபடி அவ்வப்போது டிவியை பார்த்துக் கொண்டிருந்தார்...

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.