“அஸ்வத் சொன்னா திறமை இருக்க பொண்ணா தான் இருக்கும்...”
“அதே தான் நானும் யோசிச்சேன்... அதனால தான், சரி, ப்ளான் போட்டு காமின்னு அவக் கிட்ட சொல்லி வச்சிருந்தேன்... இன்னைக்கு நம்ம மால் போகவே, சரி அந்த சைட்டையும் ஒரு தடவை நேரா பார்க்கலாம்னு போனேன்... அங்கே பார்த்தா அந்த சினேகா எனக்கு முன்னாடியே அதே இடத்துல வந்து நின்னு ப்ளான் செய்துட்டு இருக்கா...”
“குட்! நல்ல சின்சியரான பொண்ணு போலருக்கு!”
“அதே தான்ப்பா.... ஆனால் விஷயத்தை கேளுங்க...! நான் அந்த இடத்துக்கு போனப்போ, என் ப்ளானை பார்த்து அந்த லூசு அசந்து போக போகுதுன்னு அவ ஃப்ரென்ட் கிட்ட சொல்லிட்டு இருந்தா...”
“லூசா?? யாரை சொல்றா??? உன்னையா?” சுபாஷினி நம்ப முடியாமல் கேட்க, புன்னகையுடன் ஆம் என தலை அசைத்தான் ஆகாஷ்.
“விஷயம் அத்தோட முடியலைம்மா... சினேகா கிட்ட பேச்சு கொடுத்துட்டு, மெதுவா அதென்ன லூசுன்னு எதுவோ என் காதில விழுந்துச்சுன்னு நேராவே கேட்டேன்...”
“என்ன சொல்லி இருப்பா... வேற யாரையாவது சொன்னேன்னு சொல்லி மழுப்பி இருப்பா..”
“அதான் இல்லம்மா...”
“இல்லையா?? வேற என்ன சொன்னா? உன்னை தான் சொன்னேன்னு சொன்னாளா???”
“ஆமாம்மா...”
“என்ன ஆகாஷ் சொல்ற????”