ஆகாஷும் மொபைலில் ஈமெயில், மெசேஜுகள் என பார்த்த படி படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்...
அந்த படத்தின் ஒரு காட்சியில் ஹீரோயின் பேசும் போது அவளின் கம்மல்கள் அசைவதையும், குவியும் உதடுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஹீரோ...
ஆகாஷிற்கு சினேகாவின் நினைவு வந்தது...
“நான் லூசுன்னு சொன்னது உங்களை தான் சார்... ஆனால் அது நீங்க நினைக்குற மாதிரி இல்லை...”
அதை சொன்ன போது தான் அவளின் கண்களில் என்ன ஒரு ஒளி! அவளின் கம்மல்கள் கூட இப்படி தான் அழகாக அசைந்தன...
ஆனாலும், மேடம் என்னை நக்கல் விடுகிறார்களாமா!!!!??? இருக்கட்டும் இருக்கட்டும்...!!! எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போய் விடும்...!!!!
“இரண்டு பேருக்கும் இந்தாங்க சுட சுட பக்கோடா...” என்றபடி சுபாஷினி பக்கோடா தட்டை காஃபி டேபிளின் மீது வைக்க, ஆகாஷை முந்திக் கொண்டு பக்கோடாவை கையில் அள்ளினார் பிரகாஷ்.
“அப்பா, எனக்கும் மீதி வைங்க,” என்று சொல்லியபடி தானும் கையில் பக்கோடாக்களை அள்ளிக் கொண்டான் ஆகாஷ்.
பக்கோடாவை சுவைத்து விட்டு, “சூப்பரா இருக்கும்மா,” என ஆகாஷ் சொல்ல,
“ஹ்ம்ம்... சுபா... உன் கை ராசி யாருக்கும் வராது... அருமையா இருக்கு,” என பிரகாஷும் ஆகாஷ் சொன்னதை ஒத்து பாடினார்!
அவர்கள் பாராட்டு சந்தோஷத்தை கொடுத்தாலும், இது வழக்கமான ஒன்று என்பதால் அதை