(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”இதப்பாரு நான் என்ன செய்றேன், ஏது செய்றேன்னு நீ கேட்காத, எனக்குன்னு ஆயிரம் வேலைகள் இருக்கு, அதையெல்லாம் தெரிஞ்சிக்கவா நீ வந்த”

   

”இல்லை 2 பொண்ணுங்க 2 கோடின்னு பேசினீங்களே அதனால கேட்டேன்”

   

”ஒட்டுக் கேட்காத”

   

”நீங்க சத்தமா பேசினா நான் என்ன செய்றது“

   

”உன் வேலையை தவிர, எல்லா வேலையிலயும் தலையை விடு”

   

”எனக்கு நியாயம் வழங்கிட்டா, நான் ஏன் இங்க இருக்கப் போறேன்”

   

“நியாயம் நியாயம் நியாயம் இதை விட்டா உனக்கு வேற பேச்சே கிடையாதா, பேசாம இரு” என திட்டிவிட்டு வேகத்தை கூட்டி வண்டியை விரட்டினான் தில்லை.

   

அவனது கோபத்தைக் கண்டு சம்யுக்தா சற்று அமைதியானாள்.

   

வண்டியும் நேராக ஒரு பள்ளிக்கூடம் முன்பு நின்றது.

   

தில்லையும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு தனது வண்டி ஹாரனை விடாமல் அழுத்தினான். அந்தச் சத்தம் கேட்டு சம்யுக்தா காதை பொத்திக் கொண்டு அவனை முறைக்க அவனோ யாரையோ தேடினான்.

   

சில நொடிகளில் 10 அடி தள்ளியிருந்த பெட்டி கடையில் இருந்து ஒரு ஆள் கையை அசைத்தான், அதைக் கண்டு தில்லையும் ஹாரன் அடிப்பதை நிறுத்திவிட்டு நேராக பெட்டிக்கடை முன்பு வண்டியை செலுத்தினான்.

   

கடை வரவும் அவசரமாக அந்த கடையில் இருந்து ஒருவன் ஓடிவந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.