மென்மையானது தான்!
மனமே இல்லாமல் அவளின் உதடுகளை விடுவித்தவன், அவளை தன் கைகளில் இருந்து விடுதலை செய்ய மனம் வராமல் அப்படியே அவளை கைகளில் அள்ளிக் கொண்டு அவளுடன் மீண்டும் பெஞ்சிற்கு வந்து சேர்ந்தான்.
"ஐ லவ் யூ ஈஷ்," அவன் அவள் உதடுகளுக்கு எதிராக முணுமுணுத்தான்.
அப்படியே அவளின் கன்னத்தில் உதடுகளைப் பதித்தவன் முதல் முறையாக உப்பு சுவையை உணர்ந்தான். இதென்ன அவனுடைய புவனேஸ்வரி இனிக்காமல் உப்பு கரிக்கிறாள்?
இப்போது தான் அவளின் கண்களில் இருந்து வழிந்துக் கொண்டிருந்த கண்ணீர் துளிகளை கவனித்தான் ஜெய். அவனது இதயத்தில் பலமான அடி விழுந்தது. யோசிக்க ஒரு நொடியும் எடுத்துக் கொள்ளாமல் கட்டைவிரலால் அவளின் கண்ணீரைத் துடைத்தான்.
“ஈஷ்? எதுக்காக இந்த கண்ணீர்? என்ன??"
புவனேஸ்வரி அவனை விட்டு விலகி தள்ளி அமர்ந்தாள். குளிர் காற்று வீசி அவர்கள் இருவரையும் குளிர்விக்க முயற்சி செய்தது.
“ஈஷ்?” அவள் பக்கத்தில் சென்று தொட்டு பேச துடித்த கைகளை அடக்கி வைத்தான் ஜெய். எப்போதும் எதிலும் அவளை அவன் கட்டாயப் படுத்தியதில்லை!
“எதிர்காலம் இல்லாத இந்த காதலுக்கு அர்த்தம் கிடையாது ஜெய். இதுக்கு மேல நாம சந்திக்க வேண்டாம். என்னை மறந்திருங்க!”