ஜெய்.
புவனேஸ்வரி மறுப்பாக தலையை ஆட்டினாள்.
அவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான். அவள் கையை மென்மையாக பற்றினான். அவளது விரல்கள் ஜில்லென்று இருந்தன.
“என்னால உன்னை மறக்க முடியாது ஈஷ்,” என மீண்டும் சொன்னதையே திரும்ப சொன்னான் ஜெய்!
புவனேஸ்வரி ஒன்றும் பேசாமல் அவனது பிடியில் இருந்து அவள் கையை இழுத்து விடுவித்துக் கொண்டாள்.
அவளுடைய செய்கை சொன்ன செய்தி ஜெய் மேலே இன்னொரு இடியை இறக்கியது. அழுதுவிடுவானோ என்றுக் கூட அவனுக்கு பயமாக இருந்தது.
"வேண்டாம் ஈஷ், இதை செய்யாதே! நான் உன்னை உண்மையா லவ் செய்றேன்!"
"சித்ரா அத்தை சொல்றாங்க. அவங்க சொன்னால்..."
"சித்ரா அத்தை!!!" கோபத்துடன் அவனின் உதடுகள் அந்தப் பெயரை உச்சரித்தது.
நம்ப முடியாதவளைப் போல புவனேஸ்வரி முழுக் கண்களையும் விரித்தாள். தன் தவறை உணர்ந்தவனாக “சாரி,” என்று மெல்ல முணுமுணுத்தான் ஜெய்.
அவனின் இன்ஸ்டன்ட் சாரி அவளை இளக்கி இருக்க வேண்டும்! மென்மையான பார்வை ஒன்றை அவன் பக்கம் வீசியவள், அவன்