Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 51 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”அவள் உங்களை ஏத்துக்குவாங்களா சார்”
”அவளுக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்கிறேன்”
”எங்க சார், இன்னிக்கே நீங்க உங்க கோபத்தை காட்டிட்டீங்க அதுல அவங்க பயந்திருப்பாங்க”
”அதுவா அதான் நான் பண்ண பெரிய தப்பு, தில்லை சம்யுக்தாவுக்கு தாலி கட்டினது கேட்டு கோபம் பொங்கிடுச்சி, என்னால என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை”
”இன்னிக்குதான் அந்த பொண்ணையே பார்க்கறீங்க, அதுக்குள்ள அவங்க மேல தனிக்கவனமா“
”தெரியலை, இதுவரைக்கும் கல்யாணம் செஞ்சிக்க கூடாது, போலீஸ் துறையில இருந்து மக்களுக்கு சேவை செய்யனும்னு உறுதியா இருந்தேன் ஆனா, எப்ப சம்யுக்தாவை பார்த்தேனோ அப்பவே என்னோட உறுதி தளர்ந்திடுச்சி, அதுலயும் அவள் நியாயத்துக்காக தில்லையை பார்க்கப் போய் போராடின குணம் எனக்குப் பிடிச்சிருக்கு, உண்மையா இருக்கா, நேர்மையா இருக்கா, தைரியமா இருக்கா, அழகோடு சேர்ந்து புத்திசாலித்தனம் நிறையவே இருக்கு, தில்லைக்கு அவள்கூட வாழ கொடுப்பினை இல்லை எனக்காவது வாச்சதே”
”ஆனா சார் தாலிகட்டின பின்னாடி தில்லை அவளை சும்மாவா விட்டுவைச்சிருப்பான்”
”அவனால அவளை நெருங்கியிருக்க முடியாது, எனக்குத் தெரியும், கோபத்திலதான் தில்லை அவளுக்கு தாலி கட்டினான். அதுல சம்யுக்தாவோட தப்பும் இருக்கு, நியாயம் கேட்டு அவனை ரொம்பவே டார்ச்சர் பண்ணிட்டா, அவன் போற எல்லா இடத்துக்கும் அவன்கூடவே போய் இருக்கா, அவனால தன் வேலையை சரியா செய்ய முடியாம இவளால தடைகள் வந்திருக்கு,
அவள்கிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சம்யுக்தா பிடிவாதம் பிடிச்சதால, கோபத்தில தில்லை சம்யுக்தா கழுத்தில தாலி கட்டியிருக்கான், அது அவனோட விருப்பத்தோட நடக்கலை, தன்னை காதலிச்ச பொண்ணையே தன் நண்பனுக்கு கட்டி வைச்சிருக்கான்னா என்ன அர்த்தம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு என்னிக்கோ அவன் சாகப்போறான்னு, சம்யுக்தாவையும் அவன் விரும்பலையே, அவன் கெட்டவனாவே இருந்தாலும் பொண்ணுங்க