(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

விசயத்தில கொஞ்சம் நல்லவனாதான் இருக்கான். கண்டிப்பா சம்யுக்தாவை அவன் எதுவும் செஞ்சிருக்க மாட்டான்”

   

“செய்யவும் அந்த பொண்ணு விட்டிருக்காது சார்“

   

”ஆமாம் தில்லை, செத்தப்பின்னாடிதான் புருஷன் வேணும்னு நினைச்சிருக்கா, அவன் கூடவே இருந்தப்ப அவளுக்கு தில்லை மேல விருப்பம் இருந்ததில்லை, ஊருக்காகவோ இல்லை வேற ஒரு வாழ்க்கைக்காகவோ தில்லையை தேட ஆரம்பிச்சிருக்கா”

   

“இந்த விசயம் யாருக்குமே தெரியாது, பேசாம இதை மறைச்சிட்டு வேற வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிருக்கலாம், அந்தப் பொண்ணா தேடி வந்து திரும்பவும் தில்லையோட கேஸ் விசயத்தை ஆரம்பிச்சிருக்கா, பேசாம அந்த பொண்ணுகிட்ட பேசி சரி பண்ணிடலாம் சார், தில்லை நமக்கெதுக்கு சார், உங்களுக்கு தேவை அந்த பொண்ணுதானே“

   

”ஆமாம் அவளை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் ஆனா, அதுக்கு குறுக்க இருக்கற தில்லையை விட்டு வைச்சா சரியா வராது”

   

”சார் நீங்க கல்யாணத்தை பத்தி யோசிச்சா போதுமா அந்த பொண்ணும் யோசிக்கனுமே“

   

”யோசிப்பா கண்டிப்பா யோசிப்பா, அவள் மனசுல இடம்பிடிக்கறது எப்படின்னு எனக்குத் தெரியும், அதுக்கு முன்னாடி தில்லையை பிடிக்கனும், அவனை கொன்னுட்டா பிரச்சனை முடிஞ்சிடும், அவன் எல்லாம் எதுக்கு உயிரோட இருக்கனும், 

   

கெட்டவங்க எப்பவுமே திருந்த மாட்டாங்க, கெட்டவங்களாதான் இருப்பாங்க, அவங்களால மத்தவங்களுக்கும் ஆபத்துதான் வரும், அதனால அவனை கொல்றதால யாருக்கும் பெரிசா நஷ்டம் வராது, அப்படி வந்தா அது சம்யுக்தாவுக்குதான் வரும், அவளை நான் பார்த்துக்கிறேன் முதல்ல கமிஷனர் கிட்ட பேசறேன், இந்த கேஸ் ஓபன் பண்ணாதான் மேற்கொண்டு தில்லையை பத்தி விசாரிக்க முடியும்“

   

”முதல்ல கமிஷனர் ஒத்துக்கறாரான்னு பாருங்க சார்“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.