(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”ஆமாம் சார் தில்லையே பெரிய ரவுடி, இந்த ஊரை ஆள நினைச்சவன், அவன் செத்தபின்னாடி வேற ஒருத்தர் அந்த இடத்துக்கு வர்றதுதானே முறை”

   

”இது வேறயா“

   

”ஆமாம் சார், பதவி ஆசை யாரை விட்டது. இப்ப தில்லையிருந்த இடத்துக்கு யார் வர்றதுன்னு ஊருக்குள்ள இருக்கற மிச்ச மீதி சின்ன சின்ன ரௌடி பயலுகள் எல்லாம் களத்தில இறங்கியிருக்காங்க, ஒருத்தனோட ஒருத்தன் சண்டை போட்டுக்கிட்டு போட்டி போட்டுக்கிட்டு இருக்கானுங்க, எவன் அடுத்த தில்லைன்னு பெரிய எதிர்பார்ப்பு மக்கள்கிட்ட இருக்கு சார், எவன் வரான்னு வேற தெரியலை, வர்றவனால இந்த ஊர் என்ன பாடு படப்போகுதோ தெரியலையே சார்”

   

”பார்த்துக்கலாம் ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம், பதவி ஆசையில அவனவன் வெட்டி சாகட்டும் கடைசியில மிஞ்சறவனை நாம என்கவுன்டர் பண்ணிடலாம், அதுக்கு இன்னும் நாள் இருக்கு இப்போதைக்கு அவசரமே தில்லைதான், அவனை முதல்ல பிடிக்கனும்”

   

”அவன் யார்? எப்படியிருப்பான்? எங்க இருப்பான்னு தெரியாம எப்படி சார் கண்டுபிடிப்பீங்க?“

   

”கொஞ்சம் கஷ்டம்தான் ஆனா, சம்யுக்தாவுக்காக இதை நான் கண்டிப்பா செய்வேன்“

   

”அந்தப் பொண்ணு மேல ரொம்ப ஆசை வைக்காதீங்க சார், ஆளானப்பட்ட தில்லையையே ஆட்டி படைச்சிருக்கா, உங்க தலைமேல ஏறி உட்காருவா சார், பொண்ணு அழகாயிருக்குன்னு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி கடைசியில சிக்கல்ல மாட்டிக்காதீங்க சார்”

   

”தில்லைக்கு சம்யுக்தாவை சரிகட்டறது எப்படின்னு தெரியலை ஆனா, எனக்குத் தெரியும், நான் போய் கமிஷனரை பார்க்கறேன், நீ போய் இந்த ஊர்ல இருக்கிற அடுக்குமாடி குடியிருப்பில எல்லாத்திலயும் தில்லையை பத்தியும் முக்கியமா சம்யுக்தாவை பத்தியும் விசாரி, எப்படியும் தகவல் கிடைக்காது ஆனாலும் விடாத எவனாவது சந்தேகப்படற மாதிரி தெரிஞ்சா என்கிட்ட சொல்லு, நான் அவன்கிட்ட பேச வேண்டிய விதத்தில பேசி விசயத்தை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.