(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”பொய்யுன்னு சொல்லலை சார், அவள் சொல்றதைப் பத்தி எந்த தகவலும் இல்லையே சார்”

   

”இருக்கும் சம்யுக்தாவோட போட்டோ வேணும், அதை வைச்சி விசாரிச்சா கண்டிப்பா அவளை பத்தின தகவல் எவனாவது ஒருத்தன் சொல்வான், அவன் சொல்ற தகவல் வைச்சிப் பார்த்தா நிஜமாவே சம்யுக்தா தில்லையோட இருந்தாளான்னு கண்டுபிடிச்சிடலாம்”

   

”அடுத்தவன் பொண்டாட்டி உங்களுக்கு எதுக்கு சார், வேற பொண்ணை பார்க்கலாமே”

   

”யோவ் உளறாதய்யா சம்யுக்தா ஒண்ணும் தில்லையோட பொண்டாட்டி கிடையாது, அவளா சொல்லிக்கிட்டு அலையறா, நாலு சுவத்தில யாருக்குமே தெரியாம நடந்த கல்யாணம் அது, அதைப் போய் உண்மைன்னு சொல்லிக்கிட்டு அவள் இருந்தா, நானும் அப்படியிருக்கனுமா என்ன, 

   

அப்படியே அவள் தாலிக்கு மதிப்பு கொடுத்து புருஷன்தான் வேணும்னு தில்லையோட வாழ நினைச்சாலும் வாழ முடியாது, தில்லை செஞ்ச தப்புக்களை வரிசையா காட்டினாலே அவன் மேல என்கவுன்டர் பண்ண சொல்லி மேலிடத்தில இருந்து உத்தரவு வரும், எப்படியிருந்தாலும் தில்லை சாகப் போறான், அவனுக்காக இவள் ஏன் கஷ்டப்படனும் சொல்லு”

   

”என்னவோ சார் எனக்கு சுத்தமா புரியலை, இந்த தில்லை விசயம் குழப்பமா இருக்கு, அவன் இருக்கானா இல்லையா, இந்த பொண்ணுக்கு தில்லைகிட்டயிருந்து என்னதான் தேவை, அவள் சொல்றது உண்மையா இல்லை கட்டுக்கதையா ஒண்ணும் தெரியலை சார்”

   

”எனக்கும் நிறைய விசயங்கள் குழப்பமாவே இருக்கு, யாரை நம்பறதுன்னே தெரியலை, தில்லையை நம்பறதா இல்லை சம்யுக்தாவை நம்பறதான்னு தெரியலை”

   

”அந்த பொண்ணால நீங்க எங்கயாவது போய் மாட்டிக்க போறீங்க சார், கவனமா இருங்க, தில்லை செத்தா என்ன அந்த இடத்துக்கு யார் வர்றதுன்னு இந்த ஊர்ல பெரிய பிரச்சனையே நடக்குது சார்”

   

”என்னய்யா சொல்ற”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.