”ஏன்யா இப்படி சொல்ற”
”பின்ன தில்லை செத்ததுக்காக கமிஷனரை எல்லாருமே பாராட்டிட்டாங்க, இப்ப போய் தில்லை உயிரோட இருக்கான், அவனை நான் கண்டுபிடிக்கனும் அதுக்காக கேஸை ரீஓபன் பண்ணுங்கன்னு சொன்னா அவர் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாரு சார்”
”நான் ஒத்துக்க வைக்கிறேன், முதல்ல தில்லை எப்படியிருப்பான்னு தெரியலையே, ஃபைல்ல போட்டோ கூட இல்லையே“
”ஆமாம் சார் நமக்கு தெரிஞ்ச வரைக்கும் ஆஸ்பிட்டல்ல இருக்கற டெட்பாடிதான் தில்லையே, இந்த சம்யுக்தா சொல்ற தில்லை யார்ன்னு தெரியலை சார்”
”அந்த தில்லை ரொம்ப விவரமானவன்தான், தான் செய்ற தப்புக்களை இன்னொருத்தன் பேர்ல செஞ்சி கடைசியில தனக்கு நெருக்கடி வரவும் ஒரு ஆளை கொன்னு அவன்தான் தில்லைன்னு உலகத்தை நம்ப வைச்சிருக்கான் புத்திசாலி”
”என்ன சார் நீங்களே ஒரு கெட்டவனை பாராட்டறீங்க”
”கெட்டவங்க எப்பவுமே நமக்கு ஒரு அடி முன்னாடி இருக்காங்க, அவன் புத்திசாலிதான் ஆனா, நான் அதிபுத்திசாலி, அவன் ஒரு முட்டாள் தன்னைப் பத்தின தகவல்கள் அழிச்ச கையோட சம்யுக்தாவையும் அழிச்சிருக்கனும், ஏன் விட்டான் என்ன காரணம்”
”நிஜமாவே இந்த பொண்ணு சொல்றது உண்மையில்லாம இருந்தா சார்”
”என்னய்யா சொல்ற“
”ஆமாம் சார் ஒருவேளை இந்தப் பொண்ணு தில்லையை பார்க்கலைன்னு வைங்க”
”அப்ப அவள் சொன்ன கதையெல்லாம் பொய்யா”