"என்ன?" காதில் விழுந்ததை அவனால் நம்ப முடியவில்லை! மறந்திருங்க என்றா சொன்னாள்??? இல்லை, கட்டாயம் அவன் தான் தவறாகக் கேட்டு இருக்கிறான்.
"தயவு செஞ்சு என்னை திரும்ப திரும்ப சொல்ல வைக்காதீங்க ஜெய்! நம்ம காதல் சரியா வராது, வேண்டாம்."
“வேண்டாமா??? எதை வேண்டாம்னு சொல்ற?? அப்போ நீ என்னை உண்மையா லவ் செய்யலையா?”
கோபமாக வார்த்தைகள் வெளி வந்தாலும் ஜெய்யின் மனம் நடப்பதை நம்ப மறுத்தது! புவனேஸ்வரி சொன்னது உண்மையாக இருக்க முடியாது! விளையாட்டிற்கு சொன்னேன் என்று சொல்லிவிடு... ப்ளீஸ்... கெஞ்சுபவனாக அவளைப் பார்த்தான்!
“சாரி! என்னை மறந்திருங்க ஜெய்!”
"முடியாது," அழுத்தம் திருத்தமாக அவனின் உதடுகள் இன்ஸ்டன்டாக பதில் சொன்னது.
இப்போது புவனேஸ்வரியின் கண்கள் அவனின் கண்களை நேராக சந்தித்தன. அவள் வந்ததில் இருந்தே அவனை நேராக பார்க்கவில்லை என்பது இப்போது தான் அவனுக்கு உரைத்தது. அவளின் கண்களை இமைக்காமல் பார்த்தான்.
அவள் கண்ணீரை அடக்க முயற்சி செய்வதும், அது அடங்காமல் அவளின் விழியின் ஓரத்தில் இருந்து வெளி வருவதையும் கவனித்தான். அவளுடைய கண்களை சுற்றி நிழல் படர்ந்திருந்தது.
“என்னால உன்னை மறக்க முடியாது ஈஷ்,” அழுத்தமாக சொன்னான்