நலன்களுடன் பிறந்தவள். எதையும் யோசித்து, பொறுமையாக செய்பவள். எதிலுமே ஆடம்பரத்தை விரும்பாதவள். இதனாலேயே பரமசிவத்திற்கும், ராஜேஸ்வரிக்கும் புவனேஸ்வரி மேலே கொஞ்சமும் நல்ல அபிப்ராயம் கிடையாது.
பார்வதி இறந்தப் பிறகு பரமசிவத்தின் தங்கை சித்ரா அவரின் மகள்களை கவனித்துக் கொண்டாள். சித்ராவிற்கு குழந்தைகள் இல்லை. அதனால் ராஜேஸ்வரி, புவனேஸ்வரி இரண்டுப் பேரையும் தன்னுடைய சொந்தக் குழந்தைகளாகவே பாவித்தாள். அவர்களும் அவளிடம் அன்பாக இருந்தார்கள்.
**************
இங்கே போஸ்டரை பார்த்து ரசித்து மீண்டும் மீசையை முறுக்கிக் கொண்டார் பரமசிவம்.
வீட்டு நிலைமை எப்படி இருந்தாலும் போஸ்டரில் தெரிந்த விளம்பரம் அவருக்கு குஷியைக் கொடுத்தது. உற்சாகத்துடன் ஸ்டோர் திறப்பு விழாவிற்கு சென்றார்.
**************
சுரேஷ் கவலையுடன் நெற்றியை தேய்த்துக் கொண்டார்.
“உன் அண்ணன் வீட்டு விவகாரத்தால எனக்கு தலை வலிக்குது சித்ரா!” சுரேஷ் தன்னுடைய மனைவி சித்ராவிடம் புலம்பினார்.
சித்ரா கணவரின் நெற்றியை மென்மையாக வருடி விட்டாள்.
“எனக்கும் தெரியும்ங்க. அண்ணி இருந்த வரைக்கும் அவங்க எல்லாத்தையும் அருமையா பார்த்துக்கிட்டாங்க. இப்போ அடமானம்