அவங்க கஷ்டப் பட நாம விடக்கூடாது!”
“நீ சொல்றது சரி சித்ரா. அதை உன் அண்ணன் கேட்கணுமே?”
“அவனை எப்படி மாத்துறதுன்னு தான் எனக்கும் புரியலைங்க.”
“அவரே நம்மளை உதவ சொல்லி கேட்ருக்கார். எடுத்துச் சொல்லி பார்ப்போம். நாம வேற என்ன செய்ய முடியும்!”
********
“சொல்றதை கவனிங்க மச்சான். இதுக்கு மேல நீங்க அடமானம் வைக்க சொத்து, நிலம் எதுவும் கிடையாது. கடனை அடைக்காம விட்டா வட்டி வளர்ந்துட்டே போகும். இந்த வீடு சொத்துன்னு எல்லாம் கை விட்டுப் போயிடும்.” சுரேஷ் பொறுமையாக பரமசிவத்திற்கு எடுத்துச் சொன்னார்.
“அப்படி நடக்க கூடாது மச்சான். என்ன செய்யலாம்னு சொல்லுங்க. நீங்க தான் நம்ம குடும்பத்திலேயே புத்திசாலி. அதான் உங்க கிட்ட உதவி கேட்ருக்கேன்,” என்றார் பரமசிவம் கலக்கத்துடன்.
புவனேஸ்வரியும், சித்ராவும் இந்த பேச்சை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
சுரேஷ் மனைவியை குறிப்பாக ஒரு பார்வை பார்த்தார். புரிந்துக் கொண்டவளாக சித்ரா பேசினாள்.
“கடனை கொஞ்சம் கொஞ்சமா அடைச்சா எல்லாம் சரியா போயிடும் அண்ணா. வரவுக்கு ஏத்த செலவு செய்யனும். வீட்டு செலவை தாண்டி மத்த செலவை குறைக்கனும்.”