வைக்க எதுவும் மீதி இல்லாத அளவுக்கு அண்ணன் நிலைமையை கொண்டு வந்திருக்கான்!” சித்ராவும் வருத்தப்பட்டாள்.
“சரி, சரி, நீ வருத்தப்படாதே. உன் அண்ணன் பந்தா காமிக்க பணம் செலவு செய்றதை நிறுத்தினாலே அந்த குடும்பத்து பிரச்சனைங்க சரியா போயிடும். புவனேஸ்வரிக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்குறது அவருக்கு நினைவு இருக்கான்னு தெரியலை!”
“அவ பாவம், நல்ல பொண்ணு. ராஜேஸ்வரிக்கு அடிச்ச லக் போல இவளுக்கும் அடிச்சா நல்லா இருக்கும்!” சித்ராவிற்கு புவனேஸ்வரி மேல் அதிக அன்பு இருந்தது. புவனேஸ்வரியுடைய அடக்கமும், இனிமையும் கலந்த குண நலன் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.
“யார் வாழ்க்கை எப்படி இருக்கும்னு அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். அவன் புவனேஸ்வரிக்கு என்ன யோசனை வச்சிருக்கானோ தெரியலையே? எது எப்படியோ உன் அண்ணன் சொத்து ஜப்தி ஆகாம இருக்கனும்னா அவர் மாறி தான் ஆகனும். நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். அவர் கேட்க மாட்டேங்குறார். நீயாவது சொல்லி பாரு.”
“நான் சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். ராஜி கிட்ட வேணா பேச சொல்றேன்.”
“அவ உன் அண்ணாவோட ஜெராக்ஸ் காப்பி. முன்னாடியே அவ அளப்பர தாங்காது. இப்போ பெரிய குவாரி ஓனரோட மனைவி. கேட்கவே வேண்டாம். அவளாவது, உன் அண்ணனுக்கு எடுத்து சொல்றதாவது?”
“நீங்க பேச வேண்டாம் நான் பார்த்துக்குறேன். என் சொந்தம்ன்னு இப்போ இருக்குறது அண்ணனும், அவன் பசங்களும் மட்டும் தான்.