(Reading time: 7 - 14 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

விட்டு,

   

“பெரியம்மா நான் இங்கே இருந்து ஆஃபிஸ் போகலாம்னு நினைக்கிறேன்... நீங்க உங்க கார்லேயே அம்மாவையும் ப்ரியாவையும் ட்ராப் செய்திடுறீங்களா?” என காமாட்சியிடம் வினவினான்.

   

“அதுக்கென்ன உதய், ட்ராப் செய்தா போச்சு,” என்றாள் காமாட்சி.

   

நந்திதாவின் அருகே வந்த உதய், “பை நதி,” என்றான் அவனின் ட்ரேட்மார்க் புன்சிரிப்புடன்!

   

நந்திதா பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

   

“சாரீ தேடி தேடி ரொம்ப டையர்ட் ஆகிட்ட போல இருக்கு... வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு.... நான் ஈவ்னிங் பேசுறேன்... பை...”

   

அவனுக்கு சூடாக ஒரு பார்வையை பதிலாக கொடுத்தாள் நந்திதா.

   

உதய்க்கு என்ன புரிந்ததோ, என்ன புரியவில்லையோ, “பை,” என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்றான்!

   

நந்திதாவிற்கு குழப்பமாக இருந்தது! ஆனால் மற்றவர்கள் காரை நோக்கி நடக்க தொடங்கவும் வேறு வழி இல்லாமல் அவளும் அவர்களுடன் சென்றாள்!

      

வாங்கிய புடவைகளை காரில் அடுக்கிய துளசி,

   

“ஜூஸ் குடிச்சுட்டு போவோமா??? ரொம்ப தாகமா இருக்கு,” என்றாள்.

   

“இல்லை துளசி, எனக்கு ஜூஸ் எல்லாம் ஒத்துக்காது,” என்று ரேவதி மறுக்க,

   

“நானும் வரலை துளசி, நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க,” என்ற அவர்கள் மூவரையும் அனுப்பி வைத்தாள் காமாட்சி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.