(Reading time: 7 - 14 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“தெரியும்...”

   

“வாவ்! எல்லாம் தெரியுமா??? என்ன எல்லாம் தெரியும்னு எனக்கு சொல்லு பார்ப்போம்...”

   

“ப்ச்... போங்க,” என்று சினுங்கிய நந்திதாவிற்கு துளசியின் நினைவு வர,

   

“சேரை தள்ளி போட்டு உட்காருங்க, துளசியும் ப்ரியாவும் வருவாங்க,” என்றாள்.

      

“அதெப்படி வருவாங்க... நான் தானே அண்ணி கிட்ட உன்னை தனியா இங்கே விட்டுட்டுப் போக சொன்னேன்... இப்போ நீயும் நானும் வரதுக்காக இந்த ரெஸ்டாரன்ட் வெளியே அவங்க நின்னுட்டு இருக்காங்க...”

   

“என்னது?” என்று வாயை பிளந்த நந்திதா, சமாளித்துக் கொண்டு,

   

“பாவம் துளசி... நீங்க சரியான ஃப்ராட்,” என்று முடித்தாள்.

   

“இருந்துட்டு போகட்டும்... எனி திங் ஃபார் யூ மேம்...”

   

கண்கள் மின்ன சொன்னவனை முகம் மலர பார்த்து ரசித்தாள் நந்திதா!

   

உதயும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்!

   

சில வினாடிகள் செல்ல அவனின் காதல் பார்வை அவளுக்குள் பலவித ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி முகம் சிவக்க வைத்தது!

   

முகத்தை குனிந்து நந்திதாவின் முகத்துடன் உரசுவதுப் போல வைத்த உதய், “எப்போடா கல்யாண நாள் வரும்னு இருக்கு நதி... இன்னும் என் காதல் சக்சஸ் ஆயிடுச்சு... நமக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு நம்பவே முடியலை... இது என் மனசை நம்ப வைக்க...” என சொல்லிக் கொண்டே மெல்ல அவளின் கன்னத்தில் தன் உதட்டை உரசினான்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.