வச்சுக்குறாங்க... என்ன சொல்ல?” என்றான் உதய் கேலியாக!
“க்கும்... ஏன் நீங்க அப்போவே சொல்லி வாங்கி கொடுத்திருக்கலாமே,” என்றாள் நந்திதா சிணுங்கலுடன்!
“ஹை... இது நல்லா இருக்கே... ஏன், நீ நான் எப்படியும் உனக்கு பிடிச்சதை வாங்கி தருவேன்னு யோசிச்சிருந்திருக்கலாமே????”
“அது அது...”
“விடு நதி... நான் அப்போவே உனக்காக பேசி இருந்தேன்னு வை... அவ்வளவு தான் அடுத்த நிமிஷம் அந்த இடம் போர்க்களமா மாறிப் போய் இருக்கும்... இது என்ன நதி வெறும் உயிரில்லாத சாரீ தானே??? எப்போ வேணா வாங்கிக்கலாம்... கல்யாணம் முடிஞ்சிட்டா அப்புறம் நாம இப்படி கும்பலோடவா ஷாப்பிங் எல்லாம் வர போறோம்? நீயும் நானும் மட்டும் தானே??? உனக்கு அந்த கடைல இருக்க மொத்த சாரீ பிடிச்சிருந்தாலும் வாங்கி தரேன்... கல்யாணம் முடியுற வரைக்கும் நல்ல பசங்களா அமைதியா இருக்க வேண்டியது தான்...”
உதய் சொன்னதை கேட்ட நந்திதாவிற்கு நடந்தவற்றை முழுவதுமாக ஜீரணிக்க ஒரு சில வினாடிகள் தேவைப்பட்டது...
தானாக அவளின் அறிவும் விழித்துக் கொள்ள,
“சாரி... சின்னப் பிள்ளைத்தனமா நடந்துக்கிட்டேன்,” என்றாள் யோசனையுடன்!
“அதான் எனக்கு தெரியுமே... நான் தான் சொன்னேனே... ஒரு குட்டி பாப்பாவை தான் கல்யாணம் செய்துக்க போறேன்னு... பாவம் நான்... இன்னும் என்ன எல்லாம் சொல்லி தரணுமோ?”
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை...”
“எப்படி எல்லாம் இல்லை??? அப்போ உனக்கே எல்லாம் தெரியுமா???”